இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
நாம் தேவனுடைய ஆலயமாயிருக்கிறோம் ! தேவன் நம்மில் வாசமாயிருக்கிறார் . நம் சரீரத்தில் நாம் சரீர பிரகாரமாக செய்வது அவருக்கு நாம் செய்யும் தொழுகையின் ஒரு அங்கமாகும் . நாம் அசுத்தத்திலிருந்து விலகி இருப்பதற்கு மாத்திரம் அழைக்கப்படவில்லை, நம் சரீரத்தினால் தேவனுக்கு புகழ்ச்சியை உண்டாக்கவும் , நாம் கிரயத்திற்கு கொள்ளப்பட்டு பரிசுத்தம் பெறுவதற்காக கொடுக்கப்பட்ட உன்னதமான பலியை மகிமைப்படுத்தவும் அழைக்கப்பட்டுள்ளோம்.
என்னுடைய ஜெபம்
பிதாவே , என் சரீரம் உமக்கு எவ்வளவு விலையேறப்பெற்றது என்பதை நான் சில வேளைகளில் உணராமல் இருக்கிறேன் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். என்னுடைய முதிர்வயது மற்றும் எதிர்கொள்ளும் பிற சவால்கள், என் சரீரம் அழிந்துபோகும் பாத்திரம் என்பதை அநுதினமும் நினைப்பூட்டுகிறது, அவைகளை கொண்டு நான் உம்மை மகிமைப்படுத்த முடியும் என்று நம்புவது கடினமாக உள்ளது . தயவு செய்து, இப்படிப்பட்ட எண்ணங்களை என்னை விட்டு அகற்றும். மேலும்,என்னுள் வாசம் செய்யும் உம்முடைய பரிசுத்த ஆவியின் மூலமாய் உமக்கு உரிய பயபக்தியையும் இன்னும் அதிகமாய் எனக்குள் உண்டாக்கி , என்னுள் நீர் வாசம் செய்கிறீர் என்று உணர்ந்து போற்றவும் உதவியருளும் . என்னுடைய பாவநிவாரண பலியாகிய இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.