இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நான் சமீபத்தில் என் தோட்டத்தில் தண்ணீர் ஊற்றும்போது இருட்டிலே தடுமாறிய பிறகு, அந்த ஆபத்தினால் உண்டாகும் விளைவுக்கு மதிப்பு இல்லை என்று முடிவு செய்தேன், அதனால் நான் ஒரு மின்விளக்கைக் கண்டு அதை என் கையில் எடுத்துக்கொண்டேன் , அதனால் நான் பழைய காய்ந்த இலைகளின் வழியாக நடந்து செல்லும்போது , ​​​​எதிர்பாராத "ஆபத்து உண்டாக்கும் விலங்குகள் மற்றும் பூச்சிகள் " அவைகளை எதிர்க்கொள்ளாமல் , உதிர்ந்த நிரப்பப்பட்ட மலர் படுக்கைகள் மற்றும் புதர்கள் வழியாக என் குழாய்களை திறக்கவும் மற்றும் மூடவும் சென்று வந்தேன் . ( நான் விஷமுள்ள பாம்புகள் நிறைந்த ஒரு காடுகளில் வாழ்கிறேன்!) இருப்பினும், இரவில் என் வழியை ஒளிரச் செய்ய ஒரு ஒளிரும் விளக்கின் மீது எவ்வளவு மகிழ்ச்சி கொடுக்குமோ அதை காட்டிலும் இயேசுவைக் கண்டுபிடிப்பதை ஒப்பிடும் போது அந்த ஒளி ஒன்றுமில்லை. இயேசு "நான் உலகத்திற்கு ஒளியாய் இருக்கிறேன் " அவரே என் ஒளியும் கூட! அவர் என் இருண்ட இரவுகளில் என் இதயத்தையும், வரவிருக்கும் மகிமையால் என் எதிர்காலத்தையும், அவருடைய சத்திய வார்த்தைகளால் என் பாதையையும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விடியற்காலையில் என் நம்பிக்கையையும், கல்லறையின் மீது இயேசுவின் வெற்றியை ஒவ்வொரு வாரத்தின் முதல் நாள் நினைவூட்டலையும் ஒளிரச் செய்கிறார். இயேசு என் "ஜீவஒளி": உங்களுக்கு எப்படியாய் இருக்கிறார் ?

என்னுடைய ஜெபம்

பிதாவே, அன்பான விலையேறப்பெற்ற மற்றும் பரிசுத்தமான தேவனே , என் வாழ்க்கையில் நீர் கொடுத்த ஒளிக்காக நான் எப்படி நன்றி சொல்ல முடியும்? உம்முடைய நித்திய பிரசன்னத்தில் இருந்து உம் மகிமையின் ஒளியை என் முகம் பிரதிபலிக்கும் வரை, இந்த இருண்ட உலகில் இயேசுவானவர் என் வழியை எப்பொழுதும் ஒளிரச் செய்வார். உம்முடைய ஜீவ ஒளியை அனுப்பியதற்காக நன்றி, அதனால் உம்மோடு என் வாழ்க்கையை நான் கண்டுபிடிக்க முடிந்தது! உலகத்தின் மெய்யான ஒளியாகிய இயேசுவின் நாமத்தினாலே உம்மை போற்றி துதித்து நன்றி செலுத்தி ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து