இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பரிசுத்தமான வாழ்க்கை வாழ்வது என்பது அனுதினமும் நடக்கும் போராகும், நமது மாம்சத்திற்கும் இன்னுமாய் தேவனுடைய ஆவிக்கும் இடையே நடக்கும் ஒரு போர், அந்த உள்ளான ஆவி நம்மை கிறிஸ்துவைப் போல மறுருபமாக்க கிரியை செய்கிறது . பரிசுத்த ஆவியின் வல்லமையில்லாமல் , நம் மன உறுதி இறுதியில் தோல்வியை தழுவுகிறது . ஆனால் நமக்குள் கிரியை செய்யும் பரிசுத்த ஆவியின் வல்லமையின் காரணமாக, மாம்சத்திலே உண்டாகும் நம் தோல்விகளை ஜெயித்து , கிறிஸ்துவைப் போல் ஆகும் நம்முடைய இலக்கை நோக்கி நாம் முன்னேறலாம் (கொலோசெயர் 1:28-29), இதுவே பரிசுத்த ஆவியானவர் அளிக்கும் வாக்காகும் (2 கொரிந்தியர் 3:17-18). பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் நாம் தேவனுடைய பிள்ளைகளாகவும், அவருடைய மகிமையில் பங்குகொள்ள முன்குறிக்கப்பட்டவர்களாகவும் நாம் வாழத் தேர்ந்தெடுக்கிறோம், ஏனென்றால் இயேசுவின் கிருபையின் காரணமாகவும், இயேசுவானவர் நம்மீது பரிசுத்த ஆவியை நமக்குள்ளும் ஊற்றினார் (தீத்து 3:3- 7)!

என்னுடைய ஜெபம்

பிதாவே , உமது பரிசுத்த ஆவியின் அழைப்பை தள்ளி என் மாம்சத்தை நான் விரும்பி வெற்றிபெற அனுமதித்த நேரங்களுக்காக என்னை மன்னித்தருளும் . பரிசுத்த ஆவியின் அக்கினியால் என்னைச் சுத்திகரித்து, என் இரட்சகரைப் போல இருக்க என்னை முன்னோக்கி இழுத்ததற்காக உமக்கு நன்றி. இன்று, நான் முழு மனதோடே என் இருதயத்தை பரிசுத்த ஆவியானவருக்கு தருவதினால் , அது என் கடந்த கால பாவத்தை ஆற்றுவதற்காகவும், ஆவியானவர் என்னை மேலும் மேலும் இயேசுவைப் போல மாற்றுவதற்காகவும் முழுமையாய் கொடுக்கிறேன், அவருடைய நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து