இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
இந்த வசனம் பெரும்பாலும் அனலுமின்றி குளிருமின்றி இருக்கும் சபைக்கும் அதின் அங்கத்தினருக்கும் எழுதப்பட்டபோது, மற்றவர்களை கிறிஸ்துவுக்குள்ளாய் அழைப்பவர்களால் மேற்கோள் காட்டப்படுவதும் என்னை எப்போதும் கவர்ந்த வசனமாகும் , இது தேவனுடனான அவர்களின் அன்பான உறவை மீண்டுமாய் தட்டி எழுப்புகிறது. விசுவாசிகளாக, நாம் கர்த்தராகிய இயேசுவை நம் இருதயங்களிலும், வாழ்க்கையிலும், சபைகளிலும் வாசம் செய்யும்படியாய் அழைக்க வேண்டும். அவர் அங்கு இல்லை என்பதல்ல, அவர் நம் அழைப்பிற்காக வாசற்படியிலே நின்று காத்திருக்கிறார் - அவர் உள்ளே பிரவேசிக்க மாட்டார். அவர் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால் மாத்திரமே , அவர்களிடத்தில் பிரவேசிப்பார். அவர் அழைக்கப்பட்ட இருதயங்களில் மட்டுமே அவர் வசிக்கிறார்!
என்னுடைய ஜெபம்
பரிசுத்தமுள்ள தேவனே , எனது இரட்சகரே, உமது பிரசன்னத்தையும் ஐக்கியத்தையும் என்னுடன் பகிர்ந்து கொள்ள நீர் விரும்புகிறீர் என்று நான் அறிவேன். ஒவ்வொரு முறையும் நான் சுவாசிக்கும் போது நீர் அருகில் இருப்பதை நான் உணருவேன். ஆனால் அநேக வேளைகளில் உம் பிரசன்னத்தை நான் உணராமலும் , போற்றாமலும் இருக்கிறேன் என்று ஒப்புக்கொள்கிறேன்.இன்று என் இருதயத்தில் வந்து, உம் பிரசன்னம் , ஆறுதல் மற்றும் வல்லமையால் என் வாழ்க்கையை நிரப்பவும் நான் உம்மிடம் கேட்டுக்கொள்கிறேன். என் வாழ்க்கையை உமக்காகவும்,உம்முடனும் வாழ வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பரிசுத்தமும் சர்வவல்லவருமான தேவனே , இயேசுவை என் ஆண்டவராகவும்,இரட்சகராகவும் வழங்கியதற்காக உமக்கு நன்றி. அவர் நாமத்திலே எனது ஸ்தோத்திரங்களையும், துதிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆமென்.