இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
பரிசுத்த ஆவி நம்மீது தேவனின் முத்திரையாய் இருக்கிறது. ஆவியானவர் நம்மில் வாழ்கிறார், அவர் நம்மில் வாசம் செய்கிறார் என்பதன் அர்த்தம் நாம் தேவனின் ஆலயமாய் இருக்கிறோம். ஆவியானவர் நம்மை கிறிஸ்துவைப் போல மாறுவதற்கு கிரியை செய் கிறார் .கிறிஸ்துவின் நற்பண்புகளான - அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் ஆகிய இவைகளை நம்மில் உருவாக்க ஆவியானவர் நமக்கு உதவிச் செய்கிறார் . நாம் ஜெபிக்கும்போது ஆவியானவர் நமக்காக பரிந்து பேசுகிறார், நம்மிடம் சொல்ல வார்த்தைகள் இல்லாதபோது நம் இதயத்தின் அங்கலாய்ப்பை தெரிவிக்கிறார், மேலும் நாம் தொழுதுக் கொள்ளும்போது வல்லமையினால் நிரப்புகிறார். கூடுதலாக, ஆவியானவர் நாம் தேவனின் பிள்ளைகள் என்பதை உறுதியளிக்கிறார் . நாம் அவருடையவர்கள். அவருடைய எதிர்காலம், அவருடைய ஆசீர்வாதம் மற்றும் அவரின் கிருபை நம்முடையது.
என்னுடைய ஜெபம்
அன்புள்ள பிதாவே, உம்முடைய பரிசுத்த ஆவியின் மூலம் எனக்குள் வாழ்வதற்காக மிகவும் நன்றி. எனது அன்றாட வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள நான் முடிவு செய்யும்போது உமது அன்பு, சமூகம் , வல்லமை மற்றும் வழிநடத்துதலின் உறுதிக்காக நன்றி. அன்புள்ள பிதாவே, என்னுடைய இருதயத்தையும், விருப்பத்தையும் உமது ஆவியின் மறுரூபமாககும் கிருபைக்கும், வல்லமைக்கு கொடுக்கும்போது, எண்ணில் உமது குணாதிசயங்களை மேலும் உருவாக்கி, இன்று எனக்கு முன்பாக இருக்கும் பணிகளை நான் எதிர்கொள்ளும்போது உம் கிருபையை முற்றிலுமாய் காண்பிக்க தயவாய் உதவியருளும். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.