இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
தேவன் உதாரத்துவமுள்ளவர் . இந்த உதாரத்துவத்திலே அவருடைய பிள்ளைகளும் அவரைப்போலவே போல இருக்க வேண்டும் என்று அவர் விரும்பிகிறார். ஆசீர்வாதம், மன்னிப்பு, செல்வம் மற்றும் வாய்ப்புகளை இந்த பூமியிலே மற்றவர்களுக்கு விளம்பரம் செய்வது அல்ல,மாறாக நம் பரலோகத்திலுள்ள பிதாவின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, அவருடைய ஆசீர்வாதங்கள், மன்னிப்பு, செல்வம் மற்றும் வாய்ப்புகளை மற்றவர்களுக்கு கடத்தும் ஒரு வழியாய் இருக்க வேண்டும். நாம் தேவனைப் போல உதாரத்துவ மனப்பான்மையுள்ளவர்களாக இருப்பதால், மற்றும் நாம் தேவனை விசுவாசிப்பதினால் நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கிறோம் என்பதை உறுதிசெய்கிறது , இவைகள் அவருடைய குணாதிசயத்தை அடைய வழிவகை செய்கறிதினால், எதிர்காலத்திலே நாம் மற்றவர்களுக்கு உதவி செய்ய முடியும் (2 கொரிந்தியர் 9:10-11).
என்னுடைய ஜெபம்
பிதாவே, உதாரத்துவ மனப்பான்மையின் மிக சிறந்த எடுத்துக்காட்டுதலை என் வாழ்க்கையில் காண்பித்ததற்காக உமக்கு நன்றி. ஐசுவரியனாக இருந்தாலும் சரி,ஏழையாக இருந்தாலும் சரி, மற்றவர்களிடம் உதாரத்துவமாகவும், கிருபையாகவும் இருப்பதன் மூலம் நான் உம்மைப் போலவே இருக்க முடியும் என்பதை உமது கிருபையின் ஊற்று எனக்குக் கற்றுக் கொடுத்தன. என் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் மற்றவர்களிடம் அதிக கிருபையுடனும் உதாரத்துவமாகவும் இருக்க முற்படும்போது என் இருதயத்தை அன்பாலும் விசுவாசத்தாலும் நிரப்பியருளும் . இயேசுவின் நல்ல நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.