இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவன் மிகவும் பரிசுத்தமானவர், மிகவும் பராக்கிரமுள்ளவர் , மிகவும் அற்புதமானவர், ஆனாலும் அவரை "அப்பா பிதாவே " என்று அழைக்கும்படி அவர் நம்மை கட்டளையிட்டார். அப்பா என்பது யூத சிறு பிள்ளைகளால் தங்கள் தந்தையிடம் பேசுவதற்குப் பயன்படுத்தப்படும் அன்பு, பரிச்சயம், சார்ந்து இருப்பது மற்றும் அன்பின் ஒரு சொல்லாகும் . அநேக யூத குடும்பங்களில் அவர்களுடைய குடும்பத்தில் உள்ள தந்தையை "அப்பா" என்று அழைப்பது அவர்களின் வயது அல்லது அப்பாவின் வயதைப் பொருட்படுத்தாது! தேவனுடைய பரிசுத்த ஆவியின் நம்பமுடியாத ஈவின் மூலமாக , தேவன் நமக்கு இந்த மேலான ஈவாக நான் எப்பொழுதும் உங்களுக்காக இருக்கிறேன் , அன்பு, தோழமை, பாதுகாப்பு மற்றும் வல்லமையுள்ள நடத்துதல் போன்ற காரியங்களை வழங்கியுள்ளார். நித்திய மற்றும் சர்வவல்லமையுள்ள தேவனானவர் "அப்பா பிதாவாக" என்ற உறவோடு அவரை அணுகுமாறு நம்மை அழைக்கிறார். நம்முடைய தேவன், எங்கள் ஆண்டவர் , பரலோகத்தின் சேனைகளை ஆளுகிறவர் மற்றும் இப்பிரபஞ்சத்தின் சிருஷ்டிகர் , அவரே எங்கள் அப்பாவுமாய் இருக்கிறார் !

என்னுடைய ஜெபம்

அப்பா பிதாவே , எங்களுக்கு மிக நெருக்கமாக இருந்தாலும் நீர் மிகவும் பராக்கிரமுள்ளவர் , அணுகக்கூடியவர், ஆயினும் மிகவும் பரிசுத்தமானவர் , மிகவும் இரக்கமுள்ளவர் ஆயினும் மிகவும் நம்பகமானவராக இருப்பதற்காக உமக்கு கோடான கோடி நன்றி. அன்புள்ள அப்பா, உம் அன்பான பிள்ளையாக நான் உம்மிடம் வர அனுமதித்ததற்காக நன்றி. நான் இயேசுவின் நாமத்திலும், பரிசுத்த ஆவியின் வல்லமையுள்ள பரிந்துரையின் மூலமாயும் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து