இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் செய்யவேண்டிய காரியங்களை ஏன் செய்கிறோம்? ஒரு கிறிஸ்தவ நபராக நமது நடத்தைக்கான உந்துதல் என்ன? நாம் மற்றவர்களுக்கு எதிரே - குறிப்பாக நமது ஆவிக்குரிய நண்பர்களுக்கு முன்பாக நல்லவர்கள் என்பதை காண்பிப்பதற்காக மதரீதியான காரியங்களைச் செய்ய முற்படுவதினால் அந்த கண்ணியில் சிக்கிக் கொள்வது மிகவும் எளிதானது. நம் கலாச்சாரம் நம்முடைய நம்பிக்கைக்கு எதிர்மறையாக எதிர்வினையாற்றினாலும் இது மெய்யான சத்தியம் . நம்முடைய விசுவாசத்தை பற்றி அறிந்த நம்மைச் சுற்றியுள்ளவர்களும் இன்னுமாய் நம்மைச் பற்றி அறிந்த மற்ற கிறிஸ்தவர்களும் நம்முடைய நல்ல நடத்தைக்கு இலக்காகிறார்கள். நம்மைச் சுற்றியிருக்கும் அனைவரிடமும் செல்வாக்கு செலுத்த விரும்பினாலும், மற்றவர்கள் நம்முடைய நல்நடக்கையை பார்த்து நம்மை மதிக்க வேண்டும் என்று மனதிலே கொண்டு , ஆவிக்குரிய காரியங்களை குறித்து நாம் ஒருபோதும் முடிவெடுக்கக்கூடாது. தேவனை எப்பொழுதும் கனப்படுத்தவும் மற்றவர்களை ஆசீர்வதிப்பதுவுமே தான் நமது குறிக்கோளாகவே இருக்க வேண்டும்!

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே , தயவுசெய்து எனது இருதயத்தில் உள்ள எல்லா தவறான உந்துதலையும் நீக்கி அதை பரிசுத்தமாக்கி , மற்றவர்களின் தேவையை அறிந்து அதில் அவர்களுக்கு உதவுவதினால், அடியேன் உம்மை கனப்படுத்த வேண்டும் என்ற எனது விருப்பத்தின் அடிப்படையை என் மனதிலே கொண்டு நான் ஊழியத்தை செய்ய எனக்கு உதவியருளும் . இயேசுவின் நல்ல நாமத்தின் மூலமாய் , இந்த உதவியை கேட்டு ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து