இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
நமக்குக் கொடுக்கப்படாதது எது நம்மிடத்தில் இருக்கிறது ? ஒன்றுமில்லை. இது தேவனின் தயவுள்ள கிருபையால், எதிர்பாராத ஆசீர்வாதத்தால், ஒரு சீர்ப்படுத்தும் கடினமான காரியத்தால் , ஒரு வாக்களிக்கப்பட்ட வாய்ப்பு அல்லது நமது நல்ல ஆரோக்கியத்தால் வந்தது. நாம் நியாயத்தீர்ப்பின் சிங்காசனத்தின் முன்பாக நிற்கும்போது, கிருபைக்கான நமது கோரிக்கை என்னவாக இருக்கும்? இயேசுவின் மூலம் தேவனானவர் நமக்கு அளித்த தாராளமான மற்றும் அன்பான ஈவு இந்த கிருபை மாத்திரமே. இந்த கிருபையானது நம்மை கறையற்றவர்களாகவும் , பரிசுத்தமாகவும் , முழுமையாகவும் ஆக்கியது! நம்முடையது என்று கூற ஒன்றுமில்லை , அவற்றை நாமாகவே அடையவும் அல்லது விலை கொடுத்து வாங்கி உரிமைப் பாராட்டவும் எப்பொழுதும் முடியாது. தேவனின் உதாரத்துவமான மனப்பான்மை, கிருபை , இரக்கம் மற்றும் அன்பு ஆகிய காரியங்கள் மாத்திரமே பரலோகத்தின் மிகப்பெரிய ஈவுகளை நமக்கு கொண்டு வர முடியும். புகழ்பெற்ற "டாக்ஸாலஜி" கிரேக்க வார்த்தை நம்மை இப்படியாய் பாடுவதற்கு வழிநடத்துகிறது, "எல்லா ஆசீர்வாதங்களையும் நம்மேல் பொழியும் தேவனை துதியுங்கள்!"
என்னுடைய ஜெபம்
அன்பான பிதாவே , உம்முடைய அற்புதமான மற்றும் எல்லையற்ற ஆசீர்வாதங்களுக்காக நாங்கள் நன்றி கூறுகிறோம். எங்களிடம் உள்ள யாவும் , நாங்கள் இப்பொழுது இருக்கின்ற , மற்றும் நாங்கள் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்று நம்புகிறோமோ அவை அனைத்தும் நீர் எங்கள் மீது செலுத்திய கிருபை மற்றும் இரக்கத்தால் மட்டுமே உள்ளன. இயேசுவின் நாமத்தினாலே உமக்கு நன்றி செலுத்தி ஜெபிக்கிறோம் . ஆமென்.