இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல(ரோமர் 8:9). பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசம் செய்யாவிட்டால், நாம் தேவனுடைய பிள்ளைகள் அல்ல. பரிசுத்த ஆவியானவர் இல்லாமல், இயேசுவின் பலியின் சுத்திகரிப்பின் வல்லமை நம்மில் முழுமையாக செயல்படுத்தப்படாது, (1 கொரிந்தியர் 10:10-11; தீத்து 3:3-7). ஆவியானவரின் ஒத்தாசை இல்லாமல், நாம் தேவனை, அவர் தொழுதுக் கொள்ள விரும்பும் வகையில் தொழுதுக்கொள்ள முடியாது, ஏனென்றால் தேவன் ஆவியாயிருக்கிறார் . நமதுதொழுகை " நம் ஆவியுடனே பரிசுத்த ஆவியுடன் இணைந்து " இருக்க வேண்டும் - நமது ஆவி பரிசுத்த ஆவியின் வல்லமையால் நிறைந்து தேவனைத் துதிக்கும் பரிசுத்த ஆவியுடன் இணைந்திருக்க வேண்டும் (அப்போஸ்தலர் 13:1-3) - மேலும் அவருடைய சித்தத்தின்படி தேவனைப் பிரியப்படுத்தும் விதத்தில் செய்யப்பட வேண்டும்.
என்னுடைய ஜெபம்
பரிசுத்தமும் சர்வவல்லமையுமுள்ள தேவனே , நான் உம்மை மெய்யாக தொழுதுக் கொள்ளுகிறவர்களில் ஒருவராக இருக்க விரும்புகிறேன். நான் உம்மை "ஆவியுடனே ஆவியாக இணைந்து "தொழுதுக் கொள்ள விரும்புகிறேன். உம் சித்தத்தின்படி உம்மை தொழுதுக்கொண்டு உம்மை கனம்பண்ண விரும்புகிறேன். என் வாழ்நாள் முழுவதும் உம்மை துதிக்கவும், போற்றவும் விரும்புகிறேன். இயேசுவின் நல்ல நாமத்தின் மூலமாய் , பிதாவே உமக்கு நன்றி கூறி, ஜெபிக்கிறேன் . ஆமென்.