இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
பவுலானவர் உபத்திரவத்தை நன்கு அறிந்திருந்தார் : 2 கொரிந்தியர் 11: 22-33 இல் அவர் எதிர்கொண்ட சில கடினமான சவால்களின் பட்டியலைப் கவனித்து பாருங்கள். அவருடைய " இக்காலத்திற்குரிய பாடுகள்"நாம் ஒப்பிடும்போது பெரும்பாலான நம்முடைய துன்பமான காரியங்கள் பழகினவைகளாய் தோன்றும் . இருப்பினும், பவுல் தன்னுடன் கிறிஸ்துவுக்கு இருக்கும் மகிமை (கொலோ 3:1-4) மிகவும் நம்பமுடியாததாக இருக்கும் என்றும், மிகவும் அற்புதமான ஆசீர்வாதங்களுடன் ஒப்பிடுகையில் அவருடைய உபத்திரவங்கள் சிறியவைகளாய் தோன்றும் என்றும் உறுதியாய் கூறுகிறார். அந்த மகிமை நம்முடையதாய் இருக்கும் ! இப்பொழுது இவை அருமையான செய்திகள் அல்லவா .
என்னுடைய ஜெபம்
பரிசுத்தமும், சர்வவல்லமையுள்ள தேவனே, நீர் அற்புதமானவர், மகிமையுள்ளவர், மகத்துவமுள்ளவர். நீர் தாழ இறங்கி உம்முடைய கிருபையினால் என்னை இரட்சித்ததற்காக உம்மை துதிக்கிறேன். பிதாவே, அநேக வேளைகளில் என்னுடைய விசுவாசம் வலிமை வாய்ந்ததாயிருக்கிறது , என் எதிர்காலத்தைப் பற்றி நான் நம்பிக்கையுடன் உணர்கிறேன். இருப்பினும், சில வேளைகளிலே நான் கடுமையான துன்பங்களை எதிர்கொள்ளும்போது என்னுடைய விசுவாசம் அலைப்புண்டு போகிறது . அன்புள்ள தேவனே, இயேசுவானவர் மறுபடியுமாய் வரும்பொழுது நீர் பகிர்ந்துகொள்ளும் மகிமையை ஒப்பிடும்பொழுது உபத்திரவங்கள் உண்மையில் சிறியவை என்ற நம்பிக்கையுடன் அந்த சவால்களை எதிர்க் கொள்ள எனக்கு தைரியத்தையும் உறுதியையும் கொடுங்கள். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.