இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
மனந்திரும்புவதைப் குறித்து நாம்எதற்காக பயப்படுகிறோம் என்று எனக்குத் தெரியவில்லை. மனந்திரும்புதல் என்பது தேவனுடைய சித்தத்திற்கு ஏற்ப நம் இருதயங்களையும் நடத்தைகளையும் திருப்புகிறது, ஆனால் அங்குதான் தேவனுடைய இளைப்பாறுதல் நம் ஜீவியத்தில் வருகிறது. நாம் மனந்திரும்பும்போது தேவன் நம்மை அன்புடன் ஏற்றுக்கொள்வது மாத்திரமல்ல ; அவர் நம்மை மீட்டு மறுபடியுமாய் ஜெநிப்பிக்கிறார் . ஆனால் அந்த மனந்திரும்புதல் பெரும்பாலும் நமக்கு மிகவும் கடினமாக இருக்கும். அழிவுகரமான மற்றும் அடிமையாக்கும் பழக்கங்களாகிய நம் முன்னோர்களின் பாரம்பரியங்களில் நாம் சிக்கிக் கொள்கிறோம். நமது வழி தவறானது என்பதை நாம் ஒப்புக்கொள்ள விரும்பவில்லை. தேவனுடைய அன்பான அறிவுரையை விட சாத்தானின் வஞ்சகம், பொய்கள் ஆகியவை சிறந்தவை என்று கூட நாம் நம்பலாம். சில சமயங்களில் ஆவியின் கிரியையை நம்மில் தோற்கடிக்க சுயமரியாதை எண்ணங்களைப் பயன்படுத்துகிறோம், அவ்வாறு செய்வதினால் சாத்தானின் பொய்களுக்கு நாம் அடிபணிகிறோம். எனவே யாவரும் பரிசுத்தமாக வந்து, நம் பாவங்களை அறிக்கையிட்டு, நம் வாழ்க்கையை முழுவதுமாக தேவனிடம் திருப்புவோம். நாம் விரும்பினால், தேவனையும் அவருடைய உண்மையான இளைப்பாறுதளின் பிரசன்னத்தையும் காண்போம்!
என்னுடைய ஜெபம்
பரிசுத்தமும், நீதியுள்ள பிதாவே , நான் ஏன் என் "விருப்பமான " பாவங்களில் சிலவற்றைப் பிடித்துக் கொண்டிருக்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. என்னில் ஒரு பகுதியாகிய ஆவியோ இந்த தடுமாற்றங்களிலிருந்து விடுபட விரும்புகிறது , ஆனால் என்னில் ஒரு பகுதியாகிய மாம்சமோ அவ்வாறு செய்யவில்லை. என்னை முழுவதுமாக உம்மிடம் திருப்பிக் கொள்ள எனக்கு உம்முடைய உதவி தேவை. எனது வாழ்க்கையை முழுவதுமாக எல்லாவற்றையும் உம்மிடம் திருப்ப நான் உறுதியளிக்கையில் எனக்கு தயவாய் உதவியருளும் , தயவுசெய்து உம்முடைய பரிசுத்தமாக்குதல் , சுத்திகரிப்பு மற்றும் இளைப்பாறுதளின் வல்லமையை பரிசுத்த ஆவியின் மூலமாக எனக்கு தந்தருளும் . இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.