இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

மக்கள் பல மாய நம்பிக்கைகள் மற்றும் ஆவிக்குரிய காரியங்களை தங்களுக்கு விருப்பமானபடி ஒரு சுயமாய் உருவாக்கப்பட்ட போலியான கிறிஸ்தவ மார்க்கத்தை உருவாக்க விரும்பும் ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம், ஏனென்றால் அவர்கள் தங்கள் கலவையில் ஒரு சிறிய இயேசுவின் உபதேசத்தை மாத்திரமே சேர்த்துள்ளனர். பரிசுத்த வேதாகமத்தின் முதன்மையான கூற்று எளிமையானது மற்றும் நேரடியானது என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது: தேவனானவர் , சர்வவல்லமையுள்ள யாவே மெய் தேவன். அவர் மாத்திரமே உண்மையான தேவன் , நாம் அந்த ஒரே உண்மையான மற்றும் ஜீவனுள்ள தேவனை மாத்திரமே தொழுதுக்கொள்ள வேண்டும் (2 இராஜாக்கள் 19:19; நெகேமியா 9:6; மத்தேயு 4:10). அவரை மாத்திரமே நம்ப முடியும். மற்ற ஆவிகளுக்கு வல்லமை உள்ளன, ஆயினும் இந்த ஆவியின் வல்லமை நம்மை விரக்தி, மரணம் மற்றும் அழிவுக்கு வழிவகுக்கும். இயேசுவானவர் , மனித மாம்சத்தில் வந்து பரலோகத்தின் தேவனை வெளிப்படுத்தினார் (யோவான் 1:14-18; எபிரெயர் 1:1-3), சிலுவையில் நமக்காக இவ்வுலகத்தின் சாத்தானின் வல்லமை அனைத்தையும் வெற்றி சிறந்தார் (கொலோசெயர் 2:13-15). எனவே நாம் தேவனை தேடுகிறோம், யெகோவா, இஸ்ரவேலின் பெரிய "நானே ", சர்வவல்லமையுள்ளவர், ஏனென்றால் நாம் அவரில் ஜீவனைக் காண்கிறோம். மற்றவை அனைத்தும் பொய்யானவை. நாம் நமது தேவனிடம் மாத்திரமே எப்பொழுதும் விசாரிக்க வேண்டும்!

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே , நீர் பரிசுத்தர், மகத்துவமுள்ளவர் . நீர் ஒருவரே எங்கள் தொழுகைக்கு தகுதியானவர். உத்தமமாகவும் உண்மையாகவும் உம்மை தேடும் எங்கள் ஆர்வத்தை மீண்டும் தூண்டுங்கள். உமது கிருபையை உலகம் அறியும்படி எங்களை உமது மகிமைக்காக எழுப்பும். எங்கள் காலத்தில் மக்கள் உம்மை சரியான முறையில் தேவனாக கனம் பண்ண வேண்டும் என்று நாங்கள் ஏங்குகிறோம். நாங்கள் யார், நாங்கள் என்ன செய்கிறோம், நாங்கள் உம்மை எப்படி வணங்குகிறோம் என்பதன் காரணமாக எங்களைச் சுற்றியுள்ளவர்கள் உம்முடைய குணத்தையும் கிருபையையும் பார்க்கட்டும். தேசங்கள் உமது சமாதானத்தை அறிந்து, கர்த்தராக உம்மைக் கனம்பண்ணட்டும். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறோம். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து