இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம் வாழ்க்கையில் இடையூறு உண்டாக்கக் கூடிய அநேக காரியங்கள் உள்ளன, ஆனால் நம் இருதயங்கள் இயேசுவை நம்முடைய கர்த்தராக விஷேசித்து , நம்முடைய நம்பிக்கையை கர்த்தருடைய வருகையின் மீது கவனம் செலுத்தினால், தேவனின் கிருபையினின்று நம்மை பிரிக்கமாட்டாது . இயேசு நம் ஆண்டவராக நம் வலதுபாரிசத்தில் இருந்தால், நம் வாழ்க்கையினுடைய அனைத்து மிகப் பெரிய ஆசீர்வாதங்களும் நமக்கு முன்பாக இருக்கும், நாம் அசைக்கப்படுவதில்லை. மேலும், வரவிருக்கும் மகிமையின் காரியங்களை எந்த ஒரு விஷயமும் கொள்ளைக் கொண்டு போக விடமாட்டார்!

என்னுடைய ஜெபம்

பரிசுத்த ஆண்டவரே, நீர் மகிமைக்கும் , மாட்சிமைக்கும், துதிக்கும் பாத்திரர் . தேவனே , அடியேன் உமது நாமத்தை உயர்த்தி, எல்லா நாமத்திற்கும் மேலாக உயர்த்துகிறேன். நான் எதிர்காலத்தை கண்ணோக்கும்போது , நான் உம்மை கனப்படுத்தவும் உம்மோடு நித்திய வீட்டிற்கு பயணிக்கவும் விரும்புகிறேன். நீர் என்னை விட்டு விலகுவதுமில்லை அல்லது கைவிடுவதுமில்லை என்று நான் விசுவாசிப்பதால், நீர் அடியேனை வழி நடத்துவதை நான் எப்போதும் எதிர்நோக்குவேன். இயேசுவின் மூலமாய் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து