இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நீங்கள் சோர்வடைந்து இளைப்பாறுதல் தேவைப்படும்போது எங்கு செல்வீர்கள்? எந்த மெத்தையோ , விடுமுறையோ அல்லது ஓய்வோ நமக்கு உண்மையான புத்துணர்ச்சியூட்டும் , மிக அவசியமான ஆவிக்குரிய இளைப்பாறுதலை இயேசுவானவரை தவிர யாராலும் கொடுக்க முடியாது. நமது வருத்தத்தை அவரிடம் கொண்டுவந்து அவருக்குள்ளாய் அவருடனே இளைப்பாறுதலையடைய அவர் நம்மை அழைக்கிறார். எனவே நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள்? அவருடைய பிரசன்னம், அன்பு, மன்னிப்பு, கிருபை, புத்துணர்ச்சி மற்றும் இளைப்பாறுதல் ஆகியவற்றின் ஆசீர்வாதங்களை அனுபவிக்க இயேசுவிடம் வாருங்கள்! இயேசு நம்மை அழைக்கிறார்: " அவர் அவர்களை நோக்கி: வனாந்தரமான ஓரிடத்தில் தனித்துச் சற்றே இளைப்பாறும்படி போவோம் வாருங்கள்... " (மாற்கு 6:31).

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே , உமது குமாரனாகிய இயேசுவானவரே என் பெலமும் நம்பிக்கையுமாயிருக்கிறார். எனக்காகவும் உமது பிள்ளைகள் அனைவருக்காகவும் அவர் ஜெயத்துடன் திரும்பும் நாளை எதிர்நோக்குகிறேன். ஆனால் பிதாவே , நான் அவரை நன்கு தெரிந்துகொள்ளவும், முழு இருதயத்துடனே அவருக்காக வாழ விரும்புகிறேன். நான் அவரது சமூகத்திலே இளைப்பாறுதலையும், அவருடைய ஊழியத்தில் அர்த்தத்தையும், அவர் ஏற்றுக்கொள்வதில் முக்கியத்துவத்தையும் காண விரும்புகிறேன். உம்முடன் ஒரு ஆழமான உறவை நோக்கி நான் பயணிக்கும்போது, ​​உமது குமாரனைப் பற்றிய ஆழமான அறிவைப் பெறும்போது தயவுசெய்து என்னை ஆசீர்வதித்தருளும் . என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து