இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
எரேமியாவின் மிகப்பெரிய, பயமுறுத்தும் மற்றும் மனச்சோர்வுண்டாக்கும் தீர்க்கதரிசனங்களில், தேவன் தம்முடைய ஜனங்களுக்கு அவர்களின் பிடிவாதமான, எப்போதும் கலகத்தனமான மற்றும் கடினமான இருதத்தின் காரணமாக அவர்களின் பொருட்களையும் இடங்களையும் அழிப்பேன் என்று மீண்டும் மீண்டும் கூறினார். ஆயினும்கூட, இந்த வல்லமை வாய்ந்த மற்றும் எரியும் எச்சரிக்கைகளுக்கு நடுவில், அழிவைத் தாண்டி பெருகும் நம்பிக்கை, மறுசீரமைப்பு மற்றும் கிருபையின் செய்தியை தேவன் கொடுக்கிறார் . "விடாய்த்த ஆத்துமாவைச் சம்பூரணமடையப்பண்ணி, தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன்" என்ற தேவனுடைய வாக்குறுதியைவிட அதிக உறுதியளிக்கும் எதையாகிலும் உங்களால் நினைத்து பார்க்க முடியுமா? எழுபது ஆண்டுகளாக இஸ்ரவேல் வைத்திருந்தது அவ்வளவுதான் - முழு அழிவின் மத்தியிலே தேவனின் வாக்குறுதி. ஆனால் நேரம் வந்தபோது, தேவன் தம் வாக்குறுதிகளையும் தீர்க்கதரிசனங்களையும் நிறைவேற்றினார். இன்றும் அவர் எங்களுடனே அதையே செய்வார் என்று நான் நம்புகிறேன்!
என்னுடைய ஜெபம்
சிறந்த மேய்ப்பரே, நான் சோர்வாகவும், விடாய்த்தும் இருக்கிறேன். தயவுசெய்து என் ஆவியைப் புதுப்பித்து, என் உடலின் வலிமையைப் புதுப்பித்தருளும் . நீர் முன்னமே என்னுடன் மிகவும் அன்பாகவும், உதாரத்துவமாகவும் பகிர்ந்துகொண்ட ஏராளமானவற்றினால் நான் திருப்தி அடைய எனக்கு உதவியருளும் . மகிமை, மகத்துவம் , பெலன் , அதிகாரம், வல்லமை இவை அனைத்தும் உமக்கே சொந்தம். நீர் வாக்குறுதியளித்த இளைப்பாறுதல் மற்றும் திருப்திக்காக நான் மகிழ்ச்சியுடனும், நம்பிக்கையுடனும் என்னை ஒப்புக்கொடுக்கிறேன் . இயேசுவின் நாமத்தினாலே , உம்மை போற்றி புகழ்கிறேன். ஆமென்.