இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவன் நம்மை இரட்சிக்க, தம்முடைய சொந்தக் குமாரனையே ஒப்புக் கொடுத்தாரென்றால், அவர் நம்மை ஆசீர்வதிப்பதற்கும் நம்மை பாதுகாக்கவும் வேறு என்னத்தை அருளாதிருப்பார்! அதுதான் பவுலின் கருத்து. 1 கொரிந்தியர் 6:19-20ல், நாம் பரிசுத்தத்தை அடையும்படி கிரயத்திற்கு கொள்ளப்பட்டிருக்கிறோம் என்று அவர் கூறுகிறார். இங்கே, அவர் அதே கருத்தை இங்கும் கூறுகிறார், ஆனால் எங்களுக்கு வாக்களித்திருக்கிறார் . தேவனுடைய கிருபையின் சத்தியம் எப்படி இவ்வளவு பன்முக ஆசீர்வாதத்தைக் கொண்டுள்ளது என்பது ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா.

என்னுடைய ஜெபம்

சர்வ வல்லமையுள்ள தேவனே , இயேசுவின் மூலமாய் எனக்கு அளிக்கப்பட்ட உம் அன்பின் பலியைக் கண்டு நான் வியப்படைகிறேன். பிதாவே , உமது கிருபைக்கு ஈடாக ஊழியஞ் செய்ய உமது பரிசுத்த ஆவியானவரை பிரயோகித்து , உமது இரட்சிப்பிலும், உமது உன்னதமான ஆசீர்வாதங்களினாலும் அடியேனை ஆசீர்வதிக்க நீர் ஆவலாய் இருக்கிறீர் என்றும் அறிவேன் , இவைகளின் மேல் தேற்றரவாளன் என் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும் என்று கேட்கிறேன், இயேசுவின் மகிமையான நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து