இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம்முடைய சபைகளில் , ஸ்தோத்திர கூட்டங்களில் மற்றும் சுவிசேஷ பேரணிகளுக்கு அதிக கூட்டத்தை ஈர்க்க நாம் யாவரும் அடிக்கடி முயல்கிறோம். இயேசு திரளான மக்களுக்கு ஊழியஞ்செய்தார். இருப்பினும், சீஷத்துவம் பற்றிய இயேசுவின் மிகவும் உணர்ச்சிமிக்க போதனை, ஜனக்கூட்டத்திலிருந்து விலகி அவர் தனது சீஷர்களுடன் தனியாக இருக்கும்போது நிகழ்கிறது. மக்களை முதிர்ச்சியடைந்த சீஷத்துவத்திற்கு அழைப்பது மட்டும் போதாது - அவருடைய ஜனங்கள் இரட்சகருடன் அவர்களின் வாழ்க்கை அடுத்த நிலைக்கு முன்னேறி செல்லவேண்டும் என்று விரும்புகிறார் . ஆனால் இயேசுவானவர் பட்ட பாடுகளை போலவே அவர்களும் எதிர்கால சவால்களுக்கு முதிர்ச்சியடையச் செய்யவும், தயார்படுத்தவும் உறுதியான சீஷர்களின் ஒரு சிறிய குழுவுடன் தீவிர போதனைக்காக விலகி தனியே இருக்கும்படி சென்றார் .

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள தேவனே , என்னுடைய பரிசுத்த வேதாகம படிப்புக் குழுவில் உள்ளவர்களையும், எல்லா இடங்களிலும் உம்மைப் பின்தொடர விரும்பும் மக்களை ஆசீர்வதித்தருளும் . தயவு செய்து ஒரு சிறிய விசுவாசிகளின் கூட்டத்திற்கு என்னை அழைத்துச் செல்லுங்கள், அவர்களுடன் நான் என் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ள முடியும், அதன் மூலம் கிறிஸ்துவின் பாடுகளுக்கு என்னை ஒப்புக்கொடுப்பதினால் வளர எனக்கு சவால் விடுவீர்கள், அதனால் நான் சிலுவையின் வழியில் அவரைப் பின்பற்ற முடியும். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து