இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

உங்கள் முக்கியத்துவத்தின் ஆதாரம் என்ன? இந்த நீதிமொழிகள் நீங்கள் உலகிலுள்ள மற்ற மக்களின் வாழ்க்கையை முற்றிலும் மாறுபட்ட நோக்கத்தோடு பார்க்க நமக்கு சவால் விடுகிறது. தாழ்மையானவர்களும், சிறுமையானவர்களிடத்தில் பணிவுடனே சம்பாஷிக்கிறவர்களும் தேவனுக்கு பிரியமானவர்கள். கொடுமையுள்ளவர்களும் அகந்தையுள்ளவர்களும் அப்படியல்ல. தேவனானவர் இந்த நீதிமொழிகளை வெறும் வார்த்தையினால் கொடுக்கவில்லை மாறாக தன்னுடைய குமாரனை இவைகளை விளங்கச்செய்யும்படி அனுப்பினார். இப்போது நாம் இவைகளை கற்றுக்கொண்டு வாழ முடியும். ஆ ! "என்னை பின்பற்றுங்கள் " என்று இயேசுவானவர் இவைகளை கூறும்போது அதை நிரூபிக்க நமக்கு வாய்ப்பளிக்கிறார் (பார்க்க யோவான் 13)

என்னுடைய ஜெபம்

பிதாவே, எனது கலாச்சாரத்தின் வெளிப்புறத்தின் ஈர்ப்பு மற்றும் "பிரபலமான கூட்டம்" என்கிற அழுத்தம் போன்றதான காரியங்களில் என் பலவீனத்தையும், சோதனையின் பாதிப்பையும் நான் உணர்கிறேன். வல்லமை உடையவராயிருந்தும் மனத்தாழ்மையை காண்பித்தார், மேன்மையுள்ளவராய் இருந்தும் ஒடுக்கப்பட்டவராய் , மறக்கப்பட்டவராய் , தள்ளப்பட்டவராய் இருந்தார் அதற்காக இயேசுவுக்கு நன்றி செலுத்துகிறேன். கைவிடப்பட்ட , மறக்கப்பட்ட, உதவியற்றிருப்போரை என் வாழ்க்கையிலே அனுமதித்து ஒரு வித்தியாசத்தை காண்பிக்க என்னை உபயோகித்தருளும். இயேசுவின் நாமத்தினாலே. ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து