இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
காத்திருப்பு என்ற காரியத்தில் நான் தேறினவன் அல்ல. ஒரு புதிய ஆண்டிற்க்காக காத்திருப்பது எனக்குப் பிடிக்கவில்லை. நட்சத்திர விடுதியில் உள்ள செல்வதற்கும் அல்லது வெளியே வருவதற்கும் வரிசையில் காத்திருப்பது எனக்குப் பிடிக்கவில்லை. தாமதமாக வரும் ஒருவருக்காகக் காத்திருப்பது எனக்குப் பிடிக்கவில்லை. ஆச்சரியத்திற்காக காத்திருப்பது எனக்குப் பிடிக்கவில்லை. எனக்கு எதற்காகவும் காத்திருப்பது பிடிக்கவில்லை.... சரி, உங்களுக்கு யோசனை புரிகிறது, காத்திருப்பு என்ற காரியம் எனக்கு அறவே பிடிக்கவில்லை. ஆனால் ஆண்டவர் மீதான எனது நம்பிக்கை எனது மனிதப் போக்கிற்கு அப்பாற்பட்ட பொறுமையைத் தருகிறது. கர்த்தர் என்னை ஆசீர்வதித்ததைப் போல, இயேசுவானவர் மீண்டுமாய் வரும்போது எனக்காக சேர்த்து வைத்திருக்கும் நல்ல பொக்கிஷங்களை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது என்று நான் முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன்! எனவே, நான் காத்திருக்கும்போது, பரலோகத்திலுள்ள என் பிதாவை நேசிப்பதிலும், மற்றவர்களுடன் அவருடைய கிருபையைப் பகிர்ந்துகொள்வதிலும் மும்முரமாக இருக்க முயல்கிறேன்.
என்னுடைய ஜெபம்
அன்புள்ள பிதாவே , இயேசுவின் வருகைக்காக நான் காத்திருக்கும் பொறுமைக்காக நன்றி. இந்த பொறுமை எனது இயல்பான விருப்பத்திற்கு அப்பாற்பட்டது, மேலும் இது உம்முடைய உள்ளார்ந்த ஆவியின் ஈவாக நான் அங்கீகரிக்கிறேன். இயேசுவை அறியவும், அவரில் இரட்சிப்பைக் காணவும் பிறரை வழிநடத்தும் எனது முயற்சிள் யாவையும் ஆசீர்வதித்தருளும் . காத்திருப்பதில் அடியேன் உறுதியாய் இருக்கும்பொருட்டு என்னுடைய விசுவாசம் பெலமுள்ளதாக இருக்கும்படியாக ஆசீர்வதியும் . தயவுசெய்து என் வாழ்க்கையை உலகப் பொருட்களால் அல்ல, ஆனால் ஆவிக்குரிய பொறுமை மற்றும் இரக்க குணத்துடன் இருக்கும்பொருட்டு ஆசீர்வதியும் , அதனால் நான் மற்றவர்களுக்கு வெளிச்சமாக இருக்க முடியும். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன் . ஆமென்.