இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சில சமயங்களில், நமது ஜெபங்கள் வீசின பந்துகளைப் போல மேல் கூரையிலிருந்து பட்டு தரையில் விழுவது போல் தெரிகிறது, அது நம் காலடியில் சிக்கி , நம்முடைய விண்ணப்பங்களை கேலி செய்வதினால் நம்மை தடுமாறச் செய்கிறது. அநேக சமயங்களில், நாம் உணர்ச்சியில் மூழ்கிவிடுகிறோம், அதினால் நாம் நம் ஜெபங்களில் உள்ள வார்த்தைகள் நம் இருதயங்களில் உள்ள காரியத்தை சார்ந்து இருக்காது . நம்முடைய ஜெபங்களின் வல்லமை நாம் உபயோகிக்கும் வார்த்தைகளின் தேர்வில் சார்ந்திருக்கவில்லை , மாறாக பரிசுத்த ஆவியானவர் பரிந்துபேசுதலால் நமக்குக் கொடுக்கப்பட்ட அவருடைய கிருபையின்மீது தங்கியிருக்கிறது என்ற உத்தரவாதத்திற்காக தேவனுக்கு நன்றி. பரிசுத்த ஆவியானவர் நம் விண்ணப்பங்களை முன்வைக்கிறார் - நம் வார்த்தைகள், உணர்ச்சிகள், மேலும் நம் வார்த்தைகள் மற்றும் உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்ட விஷயங்களையும் கூட - நம் இருதயங்களிலிருந்தும் வாயிலிருந்தும் வெளிவருவதைப் பொருட்படுத்தாமல் ஆவியானவர் அதை வல்லமையுடனும் இன்னுமாய் அவைகளை ஏற்றுக்கொள்ளும் வண்ணமாக தேவனிடம் கொண்டுசெல்கிறார் !

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள தேவனே மற்றும் அன்பான பிதாவே , பரிசுத்த ஆவியின் ஈவிற்காக நன்றி, அவர் மூலம் நான் ஜெபிக்கும்போது என் வார்த்தைகள், எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் என் இருதயத்தின் குழப்பங்களை கூட நீர் கேட்டு ஏற்றுக்கொள்கிறீர்கள் என்ற மேலான உத்தரவாதம் எனக்கு உள்ளது. இந்த மாபெரிதான கிருபைக்காக அடியேன் நன்றி செலுத்தி இயேசுவின் மூலமாய் ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து