இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இவர் எப்படிப்பட்டவரோ? ஆ, இயேசு ஒரு மனுஷனை விட மிகவும் மேலானவர்; அவர் நமது ஆண்டவர், இராஜாதி இராஜா , மேசியா, மேய்ப்பர் மற்றும் இரட்சகர். நிச்சயமாக, இயேசு மாம்சத்தில் பூமிக்கு வந்தபோது, ​​அவர் முற்றிலுமாய் மனுஷனாக காணப்பட்டார் . இந்த இயேசு கிறிஸ்துவானவர் இந்த பூமி, காற்று மற்றும் புயல் ஆகியவற்றின் எஜமானராகவும் இருக்கிறார், ஏனென்றால் அவர் அனைத்தையும் உண்டாக்கும் போது அவர் அங்கேயே இருந்தார் (யோவான் 1:1-3; கொலோசெயர் 1:15-18). இயேசுவைப் பற்றி வெறுமனே பேசுவதற்குப் பதிலாக, நாம் அவரைப் பணிந்து வணங்க வேண்டும், அவர் எல்லாவற்றிற்காகவும், அவர் செய்ததற்காகவும், அவர் செய்த அனைத்து செயல்களுக்காகவும், நம்மை மறுபடியுமாய் அவரிடத்தில் பாதுகாப்பாக, நித்திய வீட்டிற்கு கொண்டு செல்வதற்கான கிரியைகளை செய்து கொண்டிருக்கிறார்!

என்னுடைய ஜெபம்

இரக்கமுள்ள மேய்ப்பரே மற்றும் அப்பா பிதாவே , உம்முடைய சிறந்த மகிமையின் பரலோகத்தை காலியாக்கி, இயேசுவை என் இரட்சகராகவும் மீட்ப்பராகவும் அனுப்பியதற்க்காக நன்றி (பிலிப்பியர் 2:6-11). என் வாழ்வில் புயல்களை நான் எதிர்கொள்ளும் போது, ​​என் இரட்சகர் இன்னும் காற்றையும் அலைகளையும் எதிர்கொண்டு, என்னைப் பாதுகாப்பாக நித்திய வீட்டில் ஒப்படைப்பார் என்று நம்பி, விசுவாசத்தில் உறுதியாக நிற்க எனக்கு தைரியத்தை தாரும் . இயேசுவின் மகிமையான நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து