இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம் வாழ்வின் உண்மையான பிரச்சினை என்னவென்றால், தேவனின் உண்மை தன்மையும் அவர் செய்யும் நன்மையும் அல்ல, அது நம்மைச் சார்ந்ததே. இஸ்ரவேலருக்கும் அவருடைய வாக்குத்தத்தங்களுக்கும் தேவன் உண்மையுள்ளவராகவே இருந்ததன் வரலாறு பரிசுத்த வேதாகமம் முழுவதும் காணப்படுகிறது. நம்முடைய வாழ்க்கையில் வெளிப்படையான காணப்படும் சூழ்நிலைகள் எப்படியாக இருந்தபோதிலும் அவர் வாக்குத்தத்தத்தை நம்பி நாம் அவரைச் சார்ந்து விசுவாசிக்கலாம். உண்மையான பிரச்சினை என்னவென்றால், நம்முடைய வாழ்க்கையின் பாரம் தாங்க முடியாததாகவும், விசுவாசிக்க கடினமாக இருக்கும்போது நாம் அவரை உண்மையாக நேசிக்கவும் அவருடைய சித்தத்துக்காக நம்முடைய வாழ்க்கையை வாழ தேர்ந்தெடுக்கிறோமா இல்லையா என்பதுதான். இந்த வசனம் சாதாரணமான எளிதான பதிலோ இல்லை. உறுதியான நம்பிக்கை கொண்டவர்களுக்கு இது நம்பிக்கையின் வாழ்க்கை வளையம், அவ்வாறு செய்வதற்கு எளிதான காரணம் எதுவும் இல்லாதபோது விடாமுயற்சி மாத்திரமே . நம் இரட்சிப்புக்காகத் தன் ஜீவனை தாமாகவே கொடுத்ததன் மூலம் மரணம், சாத்தான், பாவம், நரகம் ஆகியவற்றில் வெற்றி பெற்ற ஒரு இரட்சகரிடம் நம் நம்பிக்கை வேரூன்றி இருப்பதே மெய்யான விசுவாசம். ஆனால் அவர் இரண்டாம் நாளும் கல்லறைக்குள் இருந்தார். அதை பார்த்தபோது நம்பிக்கை இல்லை என்று தோன்றியது, ஆனால் மூன்றாம் நாளிலே இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தபோது நம்பிக்கை வெடித்தது பொங்கியது . எனவே, மூன்றாம் நாளின் விடியலுக்காகவும் நமது முழுமையான இரட்சிப்பிற்காகவும் காத்திருக்கும் போது, ​​நம்முடைய சொந்த "இரண்டாம் நாளில்" அவ்விசுவாசத்தினால் பிடிக்கப்படும் போது, ​​அந்த சூழலில் விசுவாசிப்பது மிகவும் கடினமானதாக இருக்கும் வேளையில் , ​​தேவனை நேசிப்பதையும் அவருடைய நோக்கங்களுக்காக வாழ்வதையும் நாம் தேர்ந்தெடுப்போமா? சிந்தியுங்கள்!

Thoughts on Today's Verse...

The real issue in our lives is not God's faithfulness and goodness but ours. The history of God's faithfulness to Israel and his promises is found throughout the Scriptures. We can depend and rely on him to do what he promises despite the apparent circumstances of our lives. The real issue is whether or not we choose to truly love him and live for his purposes when our lives become unbearable and faith becomes hard. This verse is no platitude or easy answer. It is the life ring of hope for those with gritty faith who choose to persevere when there is no easy reason for doing so. Faith like this is rooted in a Savior who triumphed over death, Satan, sin, and hell by voluntarily giving his life for our salvation. But he remained in the grave a second day. There appeared to be no hope, but hope burst forth as Jesus rose from the dead on the third day. So, will we choose to keep loving God and living for his purposes when things are hard — when we are caught on our own "second day" while waiting for the dawn of the third day and our complete salvation?

என்னுடைய ஜெபம்

ஆண்டவரே, தயவுக்கூர்ந்து எனக்கு தைரியத்தையும், நம்பிக்கையையும், நற்குணத்தையும் தாரும் , நான் உம்மை நேசிப்பது போலவும், என் வாழ்க்கையில் உமது தீர்மானத்தின்படி வாழும்போதும் நான் ஒருபோதும் என் நம்பிக்கையையும், விசுவாசத்தையும் விடமாட்டேன். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

My Prayer...

Please give me courage, faith, and character, O Lord, and may I never outlive my faith and hope in you as I love you and live for your purpose in my life. In Jesus' name, I pray. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of ரோமர்-Romans  8:28

கருத்து