இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
எரிச்சல் , அச்சுறுத்தல், அவமதிப்பு அல்லது பிரச்சனைக்கு விரைவாக பதிலளிப்பது இன்று பலருக்கு அவைகள் வலிமையையாய் தோன்றுகிறது . இருப்பினும், கோபத்தில் துரிதமாய் பதிலளிப்பது முட்டாள்தனம். ஒரு துரிதமான , தெளிவுப்படுத்தப்படாத பதில் எப்போதாவது தான் விரும்பிய நீண்ட கால முடிவுகளை உண்டாக்குமா? . இந்த வகையான பதில் எப்போதும் தீர்க்கப்பட வேண்டிய எல்லா பிரச்சினைகளையும் ஒருங்கிணைக்கிறதாய் இருக்கிறது . ஏமாற்றமளிக்கும் மற்றும் வலிமிகுந்த சூழ்நிலைகளை பொறுமையாக கையாள்வது புரிதலைக் காட்டுகிறது மற்றும் நீண்டக் கால அடிப்படையில் எப்போதும் பலனளிப்பதாயிருக்கிறது, மேலும் தேவையற்ற நட்பு இழப்பு , நேர்மை மற்றும் மரியாதை ஆகியவற்றைப் பாதுகாக்கவும் முடிகிறது .
என்னுடைய ஜெபம்
பிதாவே , நான் பொறுமையையும் இச்சையடக்கத்தையும் கேட்கிறேன். இந்த நல்லொழுக்கங்கள் என் வாழ்க்கையில் உம்முடைய ஆவியின் பிரசன்னத்தின் ஒரு பகுதியாகும் என்பதை அறிந்துக் கொள்ளுகிறேன் ,எனவே பரிசுத்த ஆவியானவர் என் இதயத்திலும் வாழ்க்கையிலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நான் கேட்கிறேன். சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மற்றும் நபர்களைப் பற்றி ஜெபிக்கவும் சிந்திக்கவும் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் வரை தயவுசெய்து எனது வாயை காத்துக் கொள்வதற்கான புரிதலையும் ஞானத்தையும் கொடுங்கள். இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிக்கிறேன் . ஆமென்.