இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
இனம், சமூகம்,மொழி,பொருளாதாரம், பாலினம் ஆகிய இவைகள் நம்மைப் பிரிக்கும் அனைத்துச் சுவர்களையும் தகர்த்தெறிந்தால் நன்றாக இருக்கும் அல்லவா. அப்போஸ்தலனாகிய பவுல் தன் வாழ்நாள் முழுவதையும் அதைச் செய்யவே முயன்றார்: மக்களைப் பிளவுப்படுத்துகின்ற நடு சுவர்களை தகர்த்து இயேசுவிடமும், சிலுவையண்டையும் யாவரையும் கொண்டுவந்தார். சிலுவையின் கீழ் மேன்மையானவர்கள் அல்லது தாழ்மையானவர்கள் என்ற நிலைகள் இல்லை, அதாவது மனிதர்களின் பொல்லாப்பான கைகளால் தாக்கப்படும் வேளைகளில் தேவனுடைய அன்பு மற்றும் தேவனுடைய பராக்கிரமம் அவர் தியாகத்தின் மூலமாய் வெளியரங்கமாயின. இவைகளை கண்டுபிடிக்கும் மக்களுக்கே சிலுவை அவ்வாறாய் இருக்கிறது . கலாச்சாரம் மற்றும் மனிதர்களின் சுயஇச்சைகள் போன்ற காரியங்கள் எப்பொழுதும் நம்மைப் பிரிக்கும் வழிகளைக் கண்டுபிடிக்கும், அதே வேளையில் இயேசுவில், இயேசுவுக்குள்ளாய் மாத்திரமே நாம் ஒன்றாக இருக்க முடியும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
என்னுடைய ஜெபம்
தேவரீர் , தவறான அபிப்பிராயமும் , சந்தேகமும் என்னை உம்முடைய பிள்ளைகளாய் இருப்பவர்களுடன் முழுமையாக அன்பை பகிர்ந்து கொள்வதில் இருந்து என்னைத் தடுக்கிறது,ஆகவே அடியேனை மன்னியும் . நான் உம்மைப் போலவே உம்முடைய பிள்ளைகளை நேசிக்க முற்படுகையில், என் வாழ்க்கை மீட்புக்கும்,ஒற்றுமைக்கும் ஒரு மாதிரியாக இருக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன் . இயேசுவானவர் மரண தருவாயில் ஒற்றுமைக்காக ஜெபித்தாரோ, அடியேனும் அதற்காகவே அவருடைய நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.