இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கவலைகள் அநேகம் உள்ளன, அவை அனைத்தும் பணம் செலுத்தும் நேரம் அல்லது வரிசெலுத்தும் நேரத்தில் நம் இருதயங்களை பாதிப்பதாக தெரிகிறது, இல்லையா? உணவு, உடை அல்லது பணத்தை விட நம்முடைய ஜீவன் மேலானது என்பதை இயேசுவானவர் நமக்கு நினைப்பூட்டினார். உணவு, உடை, பணம் ஆகியவைகளை விட ஜீவனே மேலானது என்பது போல வாழ முடியுமா என்பதே ஒரு உண்மையான கேள்வி! ஒரு வேளை கூழுக்காக தனது சேஷ்ட புத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஈசாவைப் போல நாம் எளிதில் ஏமாற்றப்படுகிறோம். வருத்தத்தையும் இன்னுமாய் சிக்கல்களில் முடிவடையும் காரியங்கள் நமக்கு நயங்காட்டினாலும் அதற்காக நம்முடைய விலையேறப்பெற்றதை விற்று போட வேண்டாம். உலகதில் அநேகர் எதைப் பின்தொடர்கிறார்கள் - மேலும் பிசாசு நம்மை எதை தொடர தூண்டுகிறான் -இவைகளுக்கு நித்திய மதிப்பு இல்லை.

என்னுடைய ஜெபம்

உதாரத்துவமுள்ள பிதாவே , என் இருதயத்திலிருந்து பயத்தையும் சுயநலத்தையும் எடுத்துப்போடும் . எல்லா காலத்திலும் மிகவும் ஆச்சரியமான ஈவை நீர் முன்னமே எங்களுக்கு கொடுத்திருக்கிறீர் என்று எனக்குத் தெரியும், அந்த ஈவு இயேசுவானவர் . தயவுக்கூர்ந்து , உம் மாறாத சமூகத்தை என் வாழ்க்கையில் இருந்து துண்டித்து, நித்தியமானவற்றிலிருந்து என்னை திசை திருப்பும் விஷயங்களிலிருந்து விலக்கி, உம்மையும் உம் சித்தத்தையும் உறுதியாய் பற்றிக்கொண்டு வாழ எனக்கு உதவியருளும் . இந்த விண்ணப்பத்தை இயேசுவின் நல்ல நாமத்தினாலே அடியேன் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து