இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம்மில் யாவரும் எப்போதும் செய்யும் ஓர் இனிமையான அறிக்கை இதுதான்: "இயேசு கிறிஸ்து, தேவனுடைய குமாரன் என்று நான் விசுவாசிக்கிறேன் , மேலும் அவரே என்னுடைய வாழ்க்கையின் ஆண்டவரரும் இரட்சகராகவும் இருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்." பிதாவாகிய தேவனின் மகிமைக்காக மறுபடியுமாய் மிகவும் உரத்த சத்தமாய் இவ்வுலகிற்க்கு இந்த வார்த்தைகளை மீண்டுமாய் சொல்லுவோம் : "இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் , அவரே என்னுடைய வாழ்க்கையின் ஆண்டவராகவும் இரட்சகராவும் இருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்." இயேசுவைப் குறித்து மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் மற்றும் அவர்கள் இயேசுவைப் எப்படி நம்புகிறார்கள் என்று பேதுருவிடம் கர்த்தர் கேட்ட கேள்வியின் மையம் அது இல்லை. இயேசுவை நான் யார் என்று சொல்வது? நீங்கள் பேதுருவைப் போல பதில் சொல்வீர்களா? நாமும் அப்படியே கூறவேண்டுமென்று நினைக்கிறேன். எனவே, மூன்றாவது முறையாக மீண்டுமாய் கூறுவோம்: "இயேசு கிறிஸ்து, தேவனுடைய குமாரன் என்று நான் விசுவாசிக்கிறேன் , மேலும் அவரே என்னுடைய வாழ்க்கையின் ஆண்டவராகவும் இரட்சகராகவும் இருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்." இப்போது, ​​இந்த ஆண்டு முடிவதற்குள், இந்த வார்த்தைகளை, தேவனை அறியாத யாரோ ஒருவர் அவர்களுடைய வாழ்க்கையில் முதல்முறையாகச் இந்த சத்தியமுள்ள வார்த்தையை சொல்லும்படியாய் அழைப்போம் என்று உறுதி கொள்வோம்!

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள பிதாவாகிய தேவனே , உம்முடைய மேசியாவாகிய இயேசுவை எனக்குக் கொண்டுவரும் திட்டத்தை நீர் உண்டுப்பண்ணி வைத்திருந்ததற்காக உமக்கு நன்றி. அன்புள்ள தேவனே , அவர் உம்முடைய நேச குமாரன் என்று என் முழுமனதோடே விசுவாசிக்கிறேன் , மேலும் அவரே என்னுடைய வாழ்க்கையின் ஆண்டவராகவும், இரட்சகராவும் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், இன்னுமாய் அடியேன் வாழும் மீதமுள்ள நாட்களிலும் இயேசு மாத்திரமே என் ஆண்டவராக இருக்க விரும்புகிறேன். உம்முடைய குமாரனும் என் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே இவை யாவற்றையும் கேட்டு ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து