இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
நம்முடைய கர்த்தர் மற்றும் இரட்சகராக இயேசுவைப் குறித்து நாம் அநேக நேரங்களில் பேசும் அதே வேளையில் , அவருடைய சத்தத்தை எளிதாக புறக்கணிப்படுவதை பார்க்க முடிகிறது அல்லது அதைவிட மோசமான காரியம் என்னவென்றால் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டும் அவைகளின்படி செய்யாமல் அவற்றை புறக்கணிக்கிறோம் . இயேசு சொன்னதான வார்த்தைகளுக்கு நாம் கீழ்ப்படிவது என்பது நாம் அவர்மீது விசுவாசம் வைத்துள்ளோம் என்பதைக் காண்பிக்கிறது . இயேசுவானவர் சொல்வதை முட்டாள்தனமாக மீறுவது, புறக்கணிப்பது அல்லது தள்ளிவிடுவது என்பது நம்முடைய ஆண்டவர் நமக்குச் சொல்வதைச் செய்வதற்கு நாம் அவரை நம்முடைய கர்த்தராக அவரை நம்பவில்லை என்பதைக் காண்பிப்பதாகும் ! மேலே சொன்ன இந்த மனோபாவத்தை எடுப்பவர்களுக்கு நியாயத்தீர்ப்பின் போது மிகவும் கடினமான விளைவுகள் உண்டாகும் என்று இயேசு உறுதியளித்தார் (மத்தேயு 7:21-27). எனவே, ஆண்டு முடிவதற்குள் நான்கு சுவிசேஷங்களை (மத்தேயு, மாற்கு , லூக்கா, & யோவான் ) ஒவ்வொன்றையும் படிக்க உறுதி ஏற்போம். இயேசுவின் வாழ்க்கை மற்றும் போதனைகளைப் பற்றி நாம் படிக்கும்போது, இயேசுவின் இருதயத்தைத் தேடும் ஒரு தேடலாக அதைச் செய்வோம், மேலும் அவரைப் போலவே இருக்க வேண்டும் என்று பரிசுத்த ஆவியானவர் வழிநடத்தும்போது , அவரை இன்னும் நன்றாக அறிந்துகொள்ளவும், முழுமையாகவும் கீழ்ப்படிதலுடனும் அவரைப் பின்பற்ற உதவும்படி பரலோகத்தின் தேவனை கேட்போம் ( 2 கொரிந்தியர் 3:18)!
என்னுடைய ஜெபம்
அன்புள்ள தகப்பனே, நான் இயேசுவானவரை நன்றாக அறிந்துகொள்ளவும், அவருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியவும் முயல்கிறேன், இன்னுமாய் உம்முடைய பரிசுத்த வேதாகமத்தை வாசிக்கும்போது, அவரே எல்லாவற்றிக்கும் மையமாக இருக்கிறார் என்று காண்கிறேன் . எனவே, என் ஆண்டவர், தேவனுடைய குமாரன், மனுஷகுமாரன், என் இரட்சகராகிய இயேசுவின் நாமத்தினாலே என்னுடைய அனுதின வாழ்க்கையின் கீழ்ப்படிதலுக்காக ஜெபிக்கிறேன். ஆமென்.