இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

அநேக ஆண்டுகளாக கிறிஸ்தவர்களாக வாழும் நாம் பல வேளைகளில் , நாம் பெற்ற கிருபைக்கு சொந்தம் பாராட்ட எந்த அதிகாரமும் இல்லை என்பதை மறந்து விடுகிறோம் . நாம் அதற்குத் தகுதியானவர்கள் என்று உணரும்போது, ​​அது நமக்கு உரிமையாய் மாத்திரமே இருக்கும் , அவை கிருபையாக ஒருபோதும் இருக்காது, நாம் அந்த கிருபையிலே நீடித்து வாழமுடியாது . தேவனுடைய குடும்பத்தில் ஒரு அங்கமாக இருப்பது கிருபையாகும் . பரிசுத்தராகிய தேவன் இப்பிரபஞ்சத்தை வார்த்தையினாலே உண்டாக்கி (இதில் நாம் கண்ணுக்கு புலன்படாத ஒரு ஜீவனாய் இருக்கிறோம்) அவைகளில் கிருபை என்பது ஒரு எளிமையான மற்றும் அற்புதமான வழிகளில் உதாரத்துவமாய் எப்படி பகிர்ந்து கொடுக்கப்படவேண்டுமோ அப்படியாய் மற்றும் நாம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத வழிகளில் அன்பை பகிர்ந்து அளிக்கப்படும் ஒரு ஈவாகும்.

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே , நீர் எனக்கு அளித்த எண்ணி முடியாத மற்றும் அளவற்ற அன்பிற்காக, என் முழங்கால்கள் யாவையும் உமக்கு முன்பாக முடக்கி நன்றிகளை ஏறெடுக்கிறேன். உம் வல்லமை என் ஞானத்திற்கு அப்பாற்பட்டது. உம்முடைய அற்புதமான பரிசுத்தம் என் புரிதலுக்கு அப்பாற்பட்டது. ஆயினும் உம்முடைய அளவற்ற கிருபை உம்முடைய அன்பினால் என்னுடையதாயிற்று , அதற்காக நீர் பெரிய விலையை கொடுத்திருக்கிறீர். அதற்கு, "நன்றி!". கோடானுகோடி நன்றிகளை மறுபடியும் நான் உமக்குச் சொல்லிக் கொள்கிறேன், என் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து