இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
சில நேரங்களில் மிக முக்கியமான விஷயங்களைப் புரிந்துகொள்வது கடினம் அல்ல. தேவன் நாம் அவரை நம் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும், முழுப் பலத்தோடும் அன்புகூர வேண்டும் என்றும் நம்மைச்சுற்றியுள்ளவர்களை நேசிக்க வேண்டும் என்று விரும்புகிறார்.தேவன் எதிர்நோக்குகிறதான குணாதிசயம் என்னவென்றால், நியாயப்பிரமாணம் முழுவதையும் உள்ளடக்கிய இந்த இரண்டு பிரதான கற்பனைகளை கனப்படுத்துவதும் , தேவனுடைய குணாதிசயங்களை நம் இருதயத்தில் கொண்டு வருவதுமாகும்.
என்னுடைய ஜெபம்
சர்வவல்லமையுள்ள தேவனே, பரலோகத்தின் பிதாவே, உம்மை நேசிக்கிறேன். ஆபிரகாம் மற்றும் தாவீதின் வழியாக உம்முடைய மேசியாவை அனுப்பும் உம் திட்டத்திற்காக நான் உன்னை நேசிக்கிறேன். உமது அளவற்ற அன்புக்காக அடியேன் உன்னை நேசிக்கிறேன்.என் மெல்லிய ஜெபத்தைக் கேட்கும்படி கிருபையாய் செவிகொடுக்கிறதற்காக உம்மை சிநேகிக்கிறேன். இயேசுவை அனுப்பி உம்முடைய சபையை ஸ்தாபித்ததற்காக உம்மில் அன்புகூருகிறேன். அன்புள்ள தேவனே உம்மை நேசிக்கிறேன். இயேசுவின் நாமத்தினாலே. ஆமென்.