இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசு தேவனுடைய மேசியா என்பதை அறிவது ஒன்று. இயேசுவை நம் ஆண்டவராகப் பின்பற்றுவது மற்றொரு காரியம் . நம் மனதையும், இருதயத்தையும், வாழ்க்கையையும் இயேசுவுடன் இணைத்துக்கொள்வது எப்போதுமே ஒரு சவாலாக இருக்கிறது. இயேசுவின் சீஷர்கள் அவரை கிறிஸ்து என்று ஒப்புக்கொண்டவுடன், மகிமைக்கான மெய்யான பாதையை அவர் அவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்பதை அவர் அறிந்திருந்தார். ஒவ்வொரு சுவிசேஷ புத்தகமும் இந்த பாதை மகிமையின் கிரீடத்திற்கு அழைத்து செல்வதற்கு முன்பு வேதனையின் வழியாய் வழி நடத்தி சென்றது என்பதை நமக்கு நினைப்பூட்டுகிறது. தங்கள் இரட்சகரும் ஆண்டவரும் நடந்த அதே சிலுவை பாதையில் தாங்களும் நடக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்தும் ஒரு பாடலில் ஆரம்பகால திருச்சபை அதைப் படம்பிடித்தது நமக்கு காட்டியது (ஓல்டு ரக்கட் கிராஸ் ) (பிலிப்பியர் 2:5-11). நாம் பரலோகத்திற்குச் செல்லும் மனிதர்கள், ஆனால் சாத்தான் நம்மைத் தடம் புரளச் செய்து தோற்கடிக்க முயலும்போது, ​​நம் பாதையில் உள்ள பள்ளங்களையும் புடைப்புகளையும் சந்திப்போம், மேலும் சில செங்குத்தான மலைகளை ஏறிச் செல்வோம் என்று உறுதியாக நம்பலாம். எவ்வாறாயினும், நமது இரட்சகர் ஏற்கனவே இந்த பாதையில் வெற்றிகரமாக நடந்தார். நம்முடைய கர்த்தருடைய மகிமையில் பங்குகொள்ள சிலுவையின் பாதை நம்மை வழிநடத்துகிறது என்பதை அவர் நமக்கு நினைப்பூட்டுகிறார்!

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பிதாவே , இயேசுவை உண்மையாக பின்பற்ற போராடும் பல விசுவாசிகளை நான் அறிவேன். உறுதியாய் தரித்து நிற்க வலிமையையும் தைரியத்தையும் அவர்களுக்குத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து அவர்களை ஊக்கப்படுத்தவும், அவர்களின் வாழ்வின் இந்த இருண்ட காலத்தில் அவர்களுக்கு உதவவும் என்னைப் பயன்படுத்தவும். என் வாழ்க்கையும் என் வார்த்தைகளும் எப்பொழுதுமே இயேசுவையே நோக்கிச் சுட்டிக் காண்பிக்கட்டும் . நான் குறிப்பாகப் பலரின் பெயரைக் குறிப்பிட விரும்புகிறேன், போராடும் மக்கள்..அவர்களை ஆசீர்வதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து