இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
நம்முடைய இருதயம், ஆத்துமா மற்றும் தேவனுக்கு பலியாகச் செலுத்தப்படும் வார்த்தைகளை விட மேலானது தொழுகையாகும்..இது நமது உடல் பாவனையும் உள்ளடக்கியது. அவருடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுவதற்கு தேவன் நமக்கு அளித்த கிருபையை நாம் புரிந்து கொள்ளும்போது, அவருடைய மகத்துவத்திற்கும் வல்லமைக்கும் முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடுவதை விட வேற என்ன அவருக்கு செய்ய முடியும். முற்றும் முடிய ஜெயித்த அவரிடம், முழு பணிவுடன் நம்மையே ஒப்புவிப்போம் . இருப்பினும், நம்மை கவனித்துக்கொள்ள விரும்பும் ஒரு அன்பான நல்ல மேய்ப்பனைப் போல நம்மை மென்மையாக வழி நடத்த தேவன் தேர்ந்தெடுக்கிறார். அந்த கிருபையானது நம்மை மனதார அவருக்கு பணிந்து குனிந்து முழங்கால்படியிட்டு தொழுதுக்கொள்ள செய்கிறது.
என்னுடைய ஜெபம்
என் ஆத்துமாவின் நல் மேய்ப்பரே, உம் ஆடுகளில் ஒருவனாக அடியேன் உமது பாதுகாப்பையும் இளைப்பாறுதலையும் நாடி உம்மிடம் வருகிறேன். வாழ்க்கையின் நெருக்கங்களினாலும், சோதனைகளினாலும் நான் அடிக்கடி துன்புறுத்தப்பட்டு உந்தப்படுவதைக் காண்கிறேன். ஆனால் இன்று மட்டும் அல்ல, என் வாழ்நாள் முழுவதும் நான் உமது மகிமைக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று என்னை முற்றிலுமாய் உம்மிடம் ஒப்புவிக்கிறேன். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.