இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

வாழ்க்கை மிகவும் குழப்பமானதாக இருக்கலாம். நம் வாழ்க்கையை நிர்வகிக்கும் மதிப்புகளை நாம் தீர்மானிக்கும்போது நமக்கு பல வாய்ப்புகள் உள்ளன. எனவே நாம் எப்படி சிறந்த வழியைக் கண்டுபிடிப்போம் - மேலும் மிக முக்கியமாக, தேவனின் வழியில் - வாழ்வதற்கு? தேவனை நமக்கு வழியை காட்டும்படி கேட்கிறோம்! நம்முடைய நம்பிக்கை அவர் மீது உள்ளது. நம்முடைய இரட்சிப்பு அவருக்குள் இருக்கிறது. அப்படியானால், நமது வழிகாட்டியாகிய அவரிடம் , அவருடைய சத்தியத்தை போதிக்கும் படி ஏன் கேட்கக்கூடாது? அவர் தம்முடைய சித்தத்தை நமக்குத் தெரியப்படுத்துவார் என்று ஏன் எதிர்பார்க்கக்கூடாது? நம்முடைய இருதயங்கள் அவருடைய சத்தியத்திற்குத் திறந்திருந்தால், நாம் அவருடைய பாதையைத் தேடினால், அவர் தம்முடைய சித்தத்தை அறிவிப்பார். எனவே, நமது கேள்விகளுக்கான பதில்களைத் தேடும்போதும், தேவனுடைய சத்தியத்தை வேதத்திலிருந்து அறிய முயலும்போதும், நமக்கு உதவ தேவனை அழைப்போம்: கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும். உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; நீரே என் இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள் முழுதும் காத்திருக்கிறேன்.

என்னுடைய ஜெபம்

மகத்துவமுள்ள தேவனே , நீரே வாழ்க்கைக்கான ஒரே சிறந்த வழிகாட்டி, தயவுசெய்து உம்முடைய சித்தத்தை இன்னும் முழுமையாக அறிய எனக்கு உதவியருளும் . நான் உமக்காக வாழ விரும்புகிறேன், உமக்கு சந்தோஷத்தைக் கொண்டுவர விரும்புகிறேன். நான் பேசும் வார்த்தைகளால் மட்டுமல்ல, என் நடத்தையின் மூலமாகவும் நான் உம்மிடம் வைத்துள்ள விசுவாசத்தை மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீர் என்னை வழிநடத்துகிறீர் என்பதை என் வாழ்க்கையின் மூலமாக நிரூபிக்க விரும்புகிறேன், என் நம்பிக்கை உம்மில் உள்ளது! இயேசுவின்நல்ல நாமத்தினாலே நான் இதைக் கேட்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து