இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் அவரைத் தேடி அவரை அழைக்க வேண்டும் என்று தேவனானவர் விரும்புகிறார். நம்முடைய இன்றைக்கான வசனம், அவரைக் கூப்பிடுவதற்கும் அவருடைய சித்தத்தை தேடுவதற்குமான, அவருடைய அநேக அழைப்புகளில் ஒன்றாகும். அவர் நமக்குப் பதிலளிக்கவும், மனுஷன் நினைக்கிறதற்கும் அப்பாற்பட்ட விஷயங்களைப் பற்றி நமக்கு சொல்லவும் விரும்புகிறார். நாம் அவரைத் தெரிந்துகொள்ள அவர் நம்மை கிட்டிசேர்ந்து வர ஆசைப்படுகிறார். பயந்துபோன ஒரு சிறு குழந்தை பக்கத்து அறையில் இருக்கும் அன்பான தகப்பனை உதவிக்காகக் கூப்பிடுவது போல, நாமும் நம் பரலோகத் தகப்பனைக் கூப்பிடலாம், நம் பிதாவானவர் நமக்கு எப்பொழுதும் பதிலளிப்பார், பாதுகாப்பார், ஆறுதல் அளிப்பார் என்பதை அறிவோம். அதிலும் நம் பிதா தம் கிருபையை கொண்டு நம்மால் முடியாதவற்றை வெளிப்படுத்துவார்.

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே மற்றும் அப்பா பிதாவே , நான் உம்மை அறியவும், இன்னுமாய் நீர் அடியேனை அறிந்துக்கொள்ளவும் விரும்புகிறேன். ஆம், நான் என் இருதயத்திலும் மற்றும் வாழ்க்கையிலும் விரும்புகிற சில காரியங்கள் இல்லை . ஆனால் உனது கிருபையை நான் அறிவேன், உமது மகிமையைப் பிரதிபலிக்கவும், உமது கிருபையை பகிர்ந்து கொள்ளவும், உம் குணாதிசயத்தை வெளிப்படுத்தவும் என் இருதயத்தையும் விருப்பத்தையும் நீ அறிவீர் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உம்முடைய பிள்ளையாக இருப்பதற்கும், என் எதிர்காலத்தை இயேசுவுக்குள்ளாய் பாதுகாப்பதற்காகவும் உமக்கு கோடான கோடி நன்றி, அவருடைய உன்னத நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து