இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஏசாயா தீர்க்கதரிசியின் இந்த மாபெரும் வாக்குத்தத்ததை யோவான் ஸ்நானன் மற்றும் இயேசுவின் வருகையுடன் தேவன் நிறைவேற்றினார் (மத்தேயு 4:15-16; லூக்கா 1:76-79). சாத்தான், தீங்கு மற்றும் பாவ மரணத்தின் இருளைத் நீக்கும் ஒளியாக இயேசு இவ்வுலகிற்க்கு (யோவான் 9:5) வந்தார் (யோவான் 12:31). எனவே, இன்றிரவு இருள் விழும்போது, ​​ஒரு தெரு விளக்கைக் கண்டுபிடித்து, ஒவ்வொரு முறையும் நீங்கள் அத்தகைய ஒளியைப் பார்க்கும் போது இரண்டு விஷயங்களைச் செய்ய நினைவூட்டுவதற்காக அதை மனதில் கொள்ளவும் : நம் இருளைப் போக்க இயேசுவானவரை ஒளியாக அனுப்பிய தேவனுக்கு நன்றி. இருளில் சிக்கியிருக்கும் உங்களுக்குத் தெரிந்தவர்களுடன் அந்த ஒளியைப் பகிர்ந்து கொள்ள உறுதியளிக்கவும்.

என்னுடைய ஜெபம்

அன்பான மற்றும் நித்தியமான தேவனே , இயேசுவின் மூலம் உமது ஒளியை என் இருதயத்தில் பிரகாசித்ததற்க்காக நன்றி (2 கொரிந்தியர் 4:6). அன்புள்ள பிதாவே , என்னைச் சுற்றியுள்ளவர்களை ஆசீர்வதிக்க என் வார்த்தைகளையும் செயல்களையும் பயன்படுத்தும்போது பரிசுத்த ஆவியின் உதவியை நான் உம்மிடம் கேட்கிறேன். இயேசு கொண்டு வரும் உம் கிருபை மற்றும் இரட்சிப்பின் ஒளியை அவர்கள் காண வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உமது குமாரன், எங்கள் இரட்சகரில் மற்றவர்கள் தங்கள் நம்பிக்கையைக் காண என் இருதயம் ஏங்குகிறது. எனவே, நான் இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன், என் செல்வாக்கு மற்றவர்களுக்கு இயேசுவை அவர்களின் வாழ்க்கைக்கு வெளிச்சமாக பார்க்க உதவும் என்று நம்புகிறேன். ஆமென்

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து