இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசுவானவர் பார்க்கும் கண்ணோட்டத்தில் மக்களைப் பார்க்க நமக்கு உதவுமாறு தேவனிடம் கேட்போம், இதனால் தேவனின் கிரியை வெளிப்பட வேண்டிய ஒருவராக நாம் அவர்களைக் காண்போம். இயேசுவும் அவருடைய சீஷர்களும் பிறவியிலேயே பார்வையற்ற ஒருவரை அணுகியபோது, ​​யாரோ ஒருவர் செய்த பாவத்தின் காரணமாக இந்த துரதிர்ஷ்டமான காரியம் அவனுடைய வாழ்க்கையில் நிகழ்ந்ததாக சீஷர்கள் கருதினர். அந்த மனிதனை மனித குலத்திற்கு அவமானம் என்று அவர்கள் முத்திரை குத்துவதையும், அவன் பாவம் செய்ததாகவோ அல்லது அவனது பெற்றோர் பாவம் செய்ததாகவோ அவர்கள் எண்ணியதால், ஒரு நபராக அவனுடைய மதிப்பை நிராகரிப்பதையும் இயேசு அவர்களிடம் கண்டார். எனவே, இயேசு அவர்களுக்குக் போதித்தார் , நாம் கவனம் செலுத்தினால், ஒரு நபரின் காயத்தை நம் வாய்ப்பாகவும், தேவைப்படும் ஒருவருக்கு தேவனின் கிருபையைக் கொண்டுவருவதற்கான பொறுப்பாகவும் பார்க்க அவர்களுக்கும், நமக்கும் போதிக்கிறார். எனவே, தேவனின் இந்த கிரியை என்ன? இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார். " (யோவான் 6:28-29) ___ இயேசு கூறினார்.

என்னுடைய ஜெபம்

பிதாவே , என்னைச் சுற்றியுள்ளவர்களை இயேசுவைப் போல பார்க்க எனக்கு உதவிச் செய்யும் . உம் கிரியை அவர்களின் வாழ்வில் செய்யப்படுவதை உறுதி செய்ய விரும்புகிறேன். முரட்டுத்தனமான மனிதர்களிடம் பொறுமையையும், புண்படுத்தும் நபர்களிடம் மென்மையையும், இயேசுவின் நற்செய்தியைக் கேட்கத் தயாராக இருப்பவர்களிடம் போதிக்கும் தைரியத்தையும் எனக்குத் தாரும் . மற்றவர்கள் தங்கள் வாழ்க்கையில் உம்முடைய வல்லமையுள்ள கிரியையை வெளிப்படுத்துவதற்கு என்னை எடுத்துப் பயன்படுத்துங்கள்! கிறிஸ்து இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து