இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
திறவுகோல் , தாழ்ப்பாள் , எச்சரிக்கை மணி மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் நிறைந்த உலகில் நாம் வாழ்கிறோம். பவுலின் வார்த்தைகள் நமக்கு ஆச்சரியத்தை உண்டாக்ககூடாது . நமக்கு மிகவும் விலையேறப்பெற்ற பொருட்களை நாம் பாதுகாக்கிறோம். சுவிசேஷத்தில் தேவனுடைய இரட்சிக்கும் கிருபையின் சத்தியத்தை விட நமக்கு மிகவும் விலையேறப்பெற்றது எதுவாக இருக்கும் ?விஷேசமாக , அந்த எண்ணிமுடியாத விலையேறப்பெற்ற நம்பிக்கையைப் பாதுகாக்க உதவும் வகையில் தேவன் நம் அனைவருக்கும் ஒரு பாதுகாப்புள்ள சூழலை தந்திருக்கிறார் . நமக்குள் வாசம்செய்யும் தேற்றரவாளன் பாதுகாப்பை கொடுக்கிறார் . அவரே பரிசுத்த ஆவியானவர்.
என்னுடைய ஜெபம்
தேவனே , உமது சத்தியத்தை அதிகாரபூர்வமாக அல்லது சுதந்திரமாக சமரசம் செய்யாமல் இருக்க எனக்கு உதவியருளும் . பரிசுத்தமான வாழ்க்கையை நான் வாழவும், எப்படி வாழ வேண்டும் என்பதை மற்றவர்களுக்குக் காட்டவும் விரும்புகிறேன். உமது கிருபையையும், இரக்கத்தையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக பிதாவே, இயேசு மறுபடியுமாய் திரும்பி வரும்போது அவர்களும் என்னுடன் சேர்ந்து வரவேற்பதில் ஈடுபட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். தயவு செய்து உமது ஆவியினால் எனக்கு அதிகாரம் கொடுத்து பொய் வசனிப்பையும் , மாயையும் கடந்து சென்று சத்தியத்திலே நிலைத்து வாழ பெலன் தாரும் . இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.