இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சபை கிறிஸ்துவின் சரீரம் என்று பவுல் பின்னாளில் தனது கடிதங்களின் வழியே போதித்தார் (ரோமர் 12:3-4; 1 கொரிந்தியர் 10:10-16-17; எபேசியர் 5:23, 29; கொலோசெயர் 1:18, 24), அவர் அதை அனுமானமாய் சொல்லவில்லை . சபை என்பது இயேசுவின் பிரசன்னம், அவரது சரீரம் ஜீவனுள்ளதாய் இவ்வுலகில் கிரியை செய்கிறது. மக்கள் ஒரு குழுவாக இணைந்து சபைக்கு செய்யப்படுவது இயேசுவுக்கு செய்யப்படுகிறதாகும் . தனிப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு செய்யப்படுவது அவர்களின் இரட்சகருக்கு செய்யப்படுகிறதாகும் . சவுல் விசுவாசிகளைத் துன்புறுத்துவது இயேசுவைத் துன்புறுத்தியது என்பதை வலியுறுத்துவதன் மூலம், முன்பு சவுல் என்று அழைக்கப்பட்ட பவுலுக்கு இயேசு இதைத் தெளிவாக்கினார் - "சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?" இயேசு தம் மக்களின் மூலமாய் இன்று இவ்வுலகில் ஜீவிக்கிறார் ! இந்த வார்த்தை மிகவும் உண்மைதான்: இன்று அநேகர் பார்க்கப்போகும் ஒரே ஒரு இயேசுவை அவர்கள் உங்கள் மூலமாகவும் என் மூலமாகவும் அநேக இயேசுவாக பார்க்கிறார்கள்.

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பிதாவே , தயவு செய்து "இயேசுவின் மகிமை என்னில் காணப்படட்டும், அவருடைய அனைத்து அற்புதமான குணாதிசயம் மற்றும் தூய்மை; அவருடைய பரிசுத்தமான ஆவி எண்ணில் இருக்கட்டும், என் எல்லா சுத்திகரிப்பும்; இயேசுவின் அழகு என்னில் முழுமையாக காணப்படட்டும்." என் இரட்சகரின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து