இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
"நீங்கள் என் இயேசுவை நேசிப்பீர்களானால் எழுந்து நின்று ஆனந்த முழக்கமிடுங்கள் !" நம் பிள்ளைகள் விரும்பி பாடும் பாடல் இதுவேயாகும் ! ஆனால் நமது வாலிப பிராயத்தில் குதூகலமும் தேவனை துதியும்,மகிழ்ச்சியும் என்னவாகும்? நாம் அதை விட்டுவிடுவதை பரலோகத்தின் தேவன் விரும்பவில்லை. பரிசுத்த வேதாகமத்தைப் படித்து, நம் அற்புதமான மற்றும் நித்தியமான தேவனை போற்றுவதற்கும் துதிப்பதற்கும் அவருக்குரிய பய பக்தியையும் கொடுக்கும் அனைத்து சரீர ரீதியான கிரியைகளையும் மேற்கொள் காட்டி - பயத்துடனே நின்று, பணிந்து குனிந்து, முழங்காற்படியிட்டு , சாஷ்டாங்கமாக விழுந்து , கைகளை உயர்த்தி, ஆனந்த முழக்கமிட்டு ... இன்னுமாய் அநேக காரியங்களை தொடர்ந்து செல்லிக் கொண்டே போகலாம் . தேவனுடைய நாமத்தை வீனிலே வழங்குகிற உலகத்திலே , நாம் தேவனுடைய விசுவாசிகளாக எழுந்து நின்று, அவர் செய்த, செய்கிற, எதிர்காலத்தில் செய்யப்போகும் அனைத்து நன்மைகளுக்காக அவரைப் புகழ்ந்து போற்றி பேச வேண்டிய நேரம் இதுவல்லவா? சபைக் கட்டிடங்களில் (நமது தொழுகையிலும் ) மட்டுமின்றி, நமது அன்றாட ஜெப நேரங்களிலும் (நமது தனிப்பட்ட ஆராதனையிலும் ) மற்றும் நாம் அன்றாடம் வாழும் முறையிலும் (நாம் யாவரோடும் செய்யும் ஆராதனையிலும் ) இதைச் செய்ய வேண்டாமா? ஆம்! "நீங்கள் எழுந்திருந்து, அநாதியாய் என்றென்றைக்குமிருக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள் என்று சொல்லி, கர்த்தரை நோக்கி: எந்த ஸ்துதி ஸ்தோத்திரத்துக்கும் மேலான உம்முடைய மகிமையுள்ள நாமத்துக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக. ."
என்னுடைய ஜெபம்
நீர் ஒருவரே தேவன் மற்றும் எனது எல்லா துதிக்கும் பாத்திரர் . நான் மற்ற கிறிஸ்தவர்களுடன் தனிப்பட்ட முறையில், எனது தினசரி தனிப்பட்ட ஆராதனை நேரங்களில், அல்லது எனது பொது தொழுகையில் , எனது குடும்பம், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு முன்மாதிரியாக வாழும்போது , எனது துதிகளையும் எனது ஸ்தோத்திரங்களையும் ஏற்றுக்கொள்ளும் . என் வாழ்விலும் என் வார்த்தைகளிலும் நான் உமக்கு வழங்க விரும்பும் எல்லா துதி ஸ்தோத்திரங்களை தயவுக்கூர்ந்து ஏற்றுக்கொள்ளும் . இயேசுவின் நாமத்தினாலே , நான் உம்மை போற்றி ஜெபிக்கிறேன் . ஆமென்.