இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

வேதாகமம் மீண்டும் மீண்டும் ஒரு உண்மையைக் கூறுகிறது: தேவன் தன்னை தேடுபவர்களின் தாகத்தைத் தணித்து பசியைப் போக்குகிறார். அடிக்கடி நாம் நம் ஆத்துமாவில் உள்ள வலியை ஆற்றவும், தற்காலிக திருப்தியால் நம் இதயத்தில் உள்ள வெறுமையை நிரப்பவும் முயற்சிக்கிறோம். ஆனால் தேவ பிரசன்னம் மாத்திரமே பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்ப முடியும். உண்மைக்கு புறம்பான திருப்தியை மறுத்து கர்த்தரையே தேடுவோம்!

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பிதாவே , என்னுடைய ஆத்தும பசிக்கு உண்மையில் நிலைத்திருக்காத காரியங்களில் திருப்தியை தேடினமைக்காக மன்னியும். ( உங்களுடைய தனிப்பட்ட சோதனைகளையும் அவைகளில் தொடர்ந்து விழுகிறதான காரியங்களையும் அறிக்கையிடுங்கள் —- உதாரணமாக உடமைகள், உங்களுடைய தகுதி, படிப்பு, போன்றவைகள் ) . அன்புள்ள ஆண்டவரே, நான் உம்மைத் தேடுகையில், என் ஆவிக்குரிய தாகத்தைத் தணித்து, என் ஆத்மாவின் பசியைப் போக்க, தயவுகூர்ந்து உம்முடைய சமூகம் என்னோடு இருப்பதை தெரியப்படுத்துங்கள்.இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து