இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் யாருடைய வார்த்தையையின் சத்தத்தை கேட்கிறீர்கள்? எல்லாவிதமான வித்தியாசமான சத்தத்தை நாம் கேட்கலாம் மற்றும் எல்லா வகையான மத வர்ணனைகளையும் நுண்ணறிவையும் கேட்கலாம். இருப்பினும், எல்லாவற்றிற்கும் சத்தியமும் மற்றும் வாழ்க்கையின் ஆதாரமாக ஒன்றை மாத்திரமே நாம் பின்பற்ற முடியும். ஒழுக்கம், , நெறிமுறைகள் மற்றும் குணநலன்கள் பற்றி நம் முடிவுகளை எடுக்கும்போது நாம் யாருடைய வார்த்தையை கேட்கப் போகிறோம்? சத்தியம், ஜீவன், மரணம், பாவம் மற்றும் இரட்சிப்பைப் பற்றி கேட்கும் உரிமையைப் பெற்றவர் யார்? மறுருபமாகும் மலையில் தேவன் அதைத் தெளிவாக்குகிறார்: நாம் அவருடைய குமாரன் இயேசுவின் வார்த்தையை கேட்க வேண்டும்! மோசே ஆச்சரியமானவர், எலியா துணிச்சலாகவும் தைரியமாகவும் இருந்தார். பேதுரு, யாக்கோபு , யோவான் ஆகியோர் இயேசுவின் மறுரூபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஆனால் தேவன் தெளிவுபடுத்தினார்: நாம் கேட்க வேண்டும், கீழ்ப்படிய வேண்டும் , சத்தியத்தின் ஆதாரமாக ஒன்றை மாத்திரமே நாம் பின்பற்ற வேண்டும், மேலும் தேவன் அவரைப் பற்றி கூறினார், "இவர் என்னுடைய நேச குமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் !"

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே , என்னைச் சூழ்ந்துள்ள சர்ச்சை, சந்தேகம், வஞ்சகம் மற்றும் வாய்வீச்சு ஆகியவற்றின் சத்தத்தை அமைதிப்படுத்த எனக்கு பரிசுத்த ஆவியின் உதவி தேவை. என் நாளில் அரசியல்வாதிகள், செல்வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் சுயமாக நியமிக்கப்பட்ட நிபுணர்களின் சத்தத்திற்கு மேலாக இயேசுவின் சத்தத்தை கேட்க எனக்கு உதவிச் செய்யும் . யாரேனும் எதைச் செய்ய விரும்பினாலும் அல்லது யாரிடம் தங்கள் இருதயங்களை ஒப்படைத்தாலும் அடியேன் எப்பொழுதும் இயேசுவைப் பின்பற்றவும், எல்லாவற்றிலும் அவருக்குக் கீழ்ப்படியவும் விரும்புகிறேன், . இயேசுவின் நாம்தனாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து