இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
நம்மை இயேசுவைப் போல மாற்றுவதற்கு ஆவியானவர் நம்மில் கிரியை நடப்பிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.இவைகள் நடந்தேற , தேவனின் சித்தத்திற்கு நம் இருதயத்தைத் திறக்க வேண்டும். "உம்முடைய சித்தத்தைச் செய்ய எனக்கு போதித்தருளும் " என்பதை விட தேவன் கேட்க விரும்பும் சிறந்த வார்த்தைகள் எதுவும் இல்லை. அவர் தேவனாக இருப்பதற்கும், நம் வாழ்வின் மீதும், நம் எல்லா விருப்பத்தின் மீதும் கட்டுப்பாடு வைத்திருப்பதும் அதுதான். நம் முழு இருதயத்துடனும் , ஆத்துமாவுடனும் , மனதுடனும் மற்றும் முழு பெலத்துடனும் தேவனை அன்பு கூருவதில் இது ஒரு முக்கிய பகுதியாகும். இவ்வாறு நாம் பிதாவிடம் நம் மனதை திறக்கும்போது, தூய பரிசுத்த ஆவியானவர் நம்மை தேவனுடைய சமூகத்திலே வைக்கிறார்!
என்னுடைய ஜெபம்
சர்வ வல்லமையுள்ள தேவனே , என் வாழ்க்கையில் நீர் மாத்திரமே என் தேவனாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உமது கிருபையையும், இரக்கத்தையையும் என் நலனுக்காகக் கையாள்வதற்கோ அல்லது பயன்படுத்துவதற்கோ நான் மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியையும் நான் கைவிடுகிறேன். எனது விருப்பத்தை உமது சித்தத்திற்கு ஒப்புவிக்கிறேன் . ஆனால் பரிசுத்த பிதாவே , நான் சில சமயங்களில் என்னை வழிதவறச் செய்யும் சுயநல மற்றும் தீய ஆசைகளுடன் போராடுகிறேன் என்று ஒப்புக்கொள்கிறேன். என் இருதயம் கடினமாகவும், என் காதுகள் உமது விருப்பத்திற்கு மந்தமாகவும் இருக்கும் போது என்னை மன்னியுங்கள். தயவு செய்து, இன்று என் வாழ்க்கையைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள், பரிசுத்த ஆவியானவர் என்னை நித்தமும் உம் சமூகத்திலே வழிநடத்தட்டும். என் ஆண்டவராகிய இயேசுவின் மூலமாகவும், அவருடைய திரு பெயரால், என் வாழ்க்கையில் தேவனாக உம் சித்தத்தை உறுதிப்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன். ஆமென்.