இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
அஞ்சனம் பார்க்கிற பழக்கம் , தீய காரியங்கள் நிறைந்த உலகம் மற்றும் குறி சொல்லுகிற இருண்ட வழக்கம் ஆகியவை மீண்டுமாக நம் வாழ்கிற நாட்களில் தோன்றுகிறது . இன்றைய உலகில் பலர் இந்த அசுத்தமான வழக்கங்களில் சிக்கியுள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, கிறிஸ்துவுக்குள் உள்ள சில விசுவாசிகள் இரண்டு ஆபத்தான வழிகளில் நடந்துகொள்கிறார்கள்: 1இந்த விஷயங்களின் யதார்த்தத்தையும், இந்த இருண்ட மற்றும் பழமையான நடைமுறைகளைப் பின்பற்றுபவர்களுக்கு கிடைக்கும் திரிக்கப்பட்ட சக்தியையும் குறைத்து மதிப்பிடுகிறார்கள் . 2.பொழுதுபோக்கு, கேளிக்கை அல்லது வசீகரம் போன்ற விஷயங்களில் அவற்றைப் பற்றிக் கொள்ளுகிறார்கள் . இந்த ஈர்ப்புகள் மற்றும் நடைமுறைகள் ஆபத்தானவை என்பதை நாம் அறிய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார், ஏனென்றால் தீய சக்திகள் - அசுத்த ஆவிகள் மற்றும் தீய சாபங்கள் - அவற்றின் பின்னால் உள்ளன. இந்த பொய்யான தெய்வங்கள், விக்கிரகங்கள் மற்றும் பொல்லாத ஆவிகள், இந்த பூமியில் மக்கள் வாழும் காலம் வரை இருக்கும் . நாம் நம் முன்னோர்களின் பாரம்பரிய நடைமுறைகளாகிய குறிச்சொல்லுதல் மற்றும் அஞ்சனம் பார்க்கிற காரியங்களில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளும்போது, அவைகள் நம்மைத் தீட்டுப்படுத்துகிறது - அவர்கள் சாத்தானுடைய கிரியைகளையே விட்டுச் செல்கிறார்கள், அவைகளை இயேசுவும் அவர்கள் மீது அவருடைய மரணத்தின் ஜெயம் மாத்திரமே மேற்கொள்ள முடியும் (கொலோசெயர் 2:12-15; 1 யோவான் 4:1-6). - பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவர் - பிதாவாகிய தேவன் ஒருவரே (யாத்திராகமம் 20:1-6; உபாகமம் 6:4-9). தீய உருவ வழிபாட்டிலிருந்து விலகி, கறைபடாமல் அவரை (தேவன் ) மாத்திரமே அவருடைய சொந்த ஜனங்கள் தொழுதுக்கொள்ள வேண்டும் (அப். 19:13-20; எபேசியர் 5:3; 1 தீமோத்தேயு 4:1; வெளிப்படுத்துதல் 9:20). நம்மை பொல்லாத வழிக்கு நடத்தி செல்லும் இத்தகைய தீய பழக்கவழக்கங்களிலிருந்து நாம் விலகி வெகு தூரம் போக வேண்டும்.(1 தெசலோனிக்கேயர் 4:1-8). ஒரே உண்மையான தேவனை மாத்திரமே நாம் எப்பொழுதும் எவ்வேளையும் தொழுதுக் கொள்ள வேண்டும்!
என்னுடைய ஜெபம்
பரிசுத்தமும் மகத்துவமுமுள்ள தேவனே , இயேசுவானவர் சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்ததின் மூலமாய் அசுத்த ஆவி மற்றும் சாத்தானின் வல்லமையின் பிடியை உடைத்ததற்காக உமக்கு நன்றி (கொலோசெயர் 2:12-15). பொய்யான விக்கிரகங்கள் , வஞ்சகமான ஆவிகள் பேய்கள் மற்றும் சாத்தானின் கொலை பாதகம் போன்றவற்றின் மீது ஆசை கொண்டு பல வகையிலும் சிக்கியிருக்கும் எனக்கு தெரிந்த மற்றும் நேசிப்பவர்களை தயவுக்கூர்ந்து விடுவித்து விடுங்கள். பிதாவே,உமது ஜனங்களுக்கு பரிசுத்த ஆவியினால அதிகாரம் அளியுங்கள். எங்களில் வாசமாயிருக்கும் பரிசுத்த ஆவியின் மூலமாய் எங்களைச் சுத்திகரித்து, உமக்குரிய பரிசுத்த மக்களாக வாழும்படி செய்யும் . நாங்கள் கறைபடாமல் எப்பொழுதும் உம் ஊழியத்திற்கு ஆயத்தமாய் இருக்க உதவி செய்யும். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே அடியேன் ஜெபிக்கிறேன். ஆமென்.