இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
என்ன ஒரு வல்லமையுள்ள வாக்குத்தத்தம் ! முந்தைய வசனத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் விவாதிப்பது போல, இயேசுவின் நாமத்தினாலே மற்றவர்களுடன் உதாரத்துவமாய் பகிர்ந்து கொள்ள நாம் தயாராக இருந்தால், மற்றவர்களை ஆசீர்வதிக்க தேவையானவை எப்போதும் நமக்கு கொடுக்கப்படும் , மேலும் நம் வாழ்வு தேவனுக்கு மகிமை சேர்க்கும் நற்செயல்கள் நிறைந்ததாக இருக்கும் என்றால், அப்பொழுது அது பலருக்கு அவரது ஆசீர்வாதமாக அமையும். எனவே சிறு பிள்ளைகளாய் இருக்கும்போது கற்றுக் கொண்ட முதல் பாடங்களில் ஒன்றை இந்த வேளையில் நாம் நினைவுபடுத்திக் கொள்வோம் : பகிர்ந்து கொள்ளுங்கள்... நம்மிடம் இருப்பதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்... உதாரத்துவமாய் பகிர்ந்து கொள்ளுங்கள்! இந்த தருணத்தில் , தேவனுடைய பிள்ளையாக , மற்றவர்களை ஆசீர்வதிக்க இயேசுவின் நாமத்தினாலே பகிர்ந்து கொள்வோம், அதனால் மற்றவர்கள் உறுதியான வழிகளில் அவருடைய கிருபையைப் பெறுவார்கள்.
என்னுடைய ஜெபம்
என் வாழ்க்கையில் நீர் பொழிந்த அனைத்து நம்பமுடியாத ஆசீர்வாதங்களுக்காகவும் நன்றி, பிதாவே . நீர் என்னை உடல் ரீதியாகவும் ஆவிக்குரிய பிரகாரமாகவும் ஆசீர்வதித்துள்ளீர்கள். இப்போது, என் வாழ்வில் நீர் அபரிமிதமாகப் பொழிந்துள்ள ஈவுகளில் உதாரத்துவமாக இருக்க பரிசுத்த ஆவியானவர் எனக்கு உதவும்படி கேட்டுக்கொள்கிறேன். ஆண்டவரே, நீர் எனக்கு வழங்கிய ஆசீர்வாதங்களின் மூலம் உமது கிருபையை பிறர் அறிந்துகொள்ளும்படி நான் உமது ஆசீர்வாதங்களின் வடிகாலாக இருப்பேன். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.