இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இந்த வார்த்தைகள் யோசுவா மோசேயின் ஸ்தானத்தில் பொறுப்பேற்றபோது அவரிடம் பேசப்பட்டாலும், அவை நமக்கும் பொருந்தும்.சிறிது நேரத்தை ஒதுக்கி, சங்கீதம் 139 ஐ உரக்கப் படியுங்கள், தேவன் நம்மோடு இருப்பார் என்ற வாக்குத்தத்தம் அவரை உண்மையாய் நோக்கி கூப்பிடும் அனைவருக்கும் உள்ளது. மத்தேயு 28: 18-20 இல் இயேசுவின் வார்த்தைகளைக் கேளுங்கள், ஏனெனில் அவர் தனது சீஷர்களிடத்தில் , "இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்று வாக்குறுதியளித்தார். எபிரேயர் 13: 5 இல் பழைய ஏற்பாட்டின் ஆசீர்வாதத்திலிருந்து மீண்டும் வலியுறுத்தப்பட்ட தேவனின் வாக்குறுதியை நினைவில் வையுங்கள், "நான் உன்னை ஒருபோதும் விட்டுவிடமாட்டேன், நான் உன்னை விட்டு விலகமாட்டேன்!".பலங்கொண்டு திடமனதாயிருங்கள் ; நம்முடைய தேவன் , நம் பிதா , நம் மேய்ப்பன், நம்முடன் இருப்பதுப் போல தெரியாவிட்டாலுங் கூட எப்போதும் நம் அருகிலேயே இருக்கிறார், நாம் தனித்திருக்கவுமில்லை . நாம் பயப்படத் தேவையுமில்லை.உண்மையில், மரணமானாலும் நம்மை அவருடைய அன்பைவிட்டு பிரிக்கமாட்டாது (ரோமர் 8: 35-39 ஐப் பார்க்கவும்).

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பிதாவே , உம் வாக்குறுதியில் மட்டுமல்ல, உம் பிரசன்னத்தில் மட்டுமல்ல, என் விழிப்புணர்விலும் அருகில் இருங்கள்.எனக்கு முன்னால் உள்ள நம்பமுடியாத வாய்ப்புகளுக்கு நான் பதிலளிக்கும் போது நீர் அருகில் இருப்பதை நான் உணர்ந்துக் கொள்ள உதவிச் செய்யும் . நான் என் வாழ்க்கையில் கடுமையான சவால்களை எதிர்கொள்ளும் போது நீர் எனக்கு உதவியாய் இருந்து அன்பை நிலைநிறுத்துகிறீர் என்ற நம்பிக்கையை அடியேனுக்குத் தாரும். உம்முடைய கிருபையின் மேல் நம்பிக்கையாயிருக்கிறேன். இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன் . ஆமென்

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து