இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
எசேக்கியேல் ஒரு ஆசாரியராக இருக்க முப்பது வருஷங்களாய் ஆயத்தம் செய்திருந்தார், ஆனால் அவர் எருசலேமில் உள்ள தேவனின் ஆலயத்தில் ஆசாரிய வேளை செய்ய வேண்டிய நேரம் வந்தபோது, நகரம் பெரும்பாலும் அழிக்கப்பட்டது, எசேக்கியேல் நாடுகடத்தப்பட்டார். இஸ்ரவேலின் வடக்குப் பழங்குடியினருக்கும் யூதாவின் தெற்குப் பழங்குடியினருக்கும் அவர்களின் சமூக அநீதி, நீதிக்கு எதிரான கலகம் மற்றும் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிய விரும்பாததன் விளைவுகளை அவர்கள் அனுபவிப்பார்கள் என்று தேவன் வாக்குத்தத்தம் அளித்திருந்தார். தேவன் தனது வாக்குத்தத்தங்ளுக்கு உண்மையாகவே இருக்கிறார், மேலும் அவர் தம் மக்களை மீட்டெடுப்பார், ஆனால் அவர்களின் சொந்த கடினமான இருதயங்களிலிருந்து மற்றும் தீய வழிகளின் விளைவுகளை அவர்கள் உணந்து மனம்திரும்பும் வரை அதை செய்வதில்லை . இந்த நீதியின் காலத்திற்கு பிறகு , தேவன் தம்முடைய நீதியுள்ள மக்களை மீட்டு, அவர்கள் தேசத்திற்குத் திரும்பக் கொண்டுவருவார், அவர்கள் அவருடைய மக்களாக இருப்பார்கள். ஆனால் தேவனானவர் அவருக்கும் அவருடைய வார்த்தைக்கும் எதிர்த்து நிற்கும் மக்கள் , பாவம், தீமை ஆகியவற்றை அலட்சியப்படுத்துவதில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நல்ல காரியங்கள் செய்வது , ஜெப ஆலயங்களுக்கு செல்வது, நல்ல பாடல்களைக் கேட்பது ஆகியவை அவர்களின் தீய விருப்பங்களின் விளைவுகளிலிருந்து அவர்களைத் ஒருபோதும் தப்பவிடாது . இன்றும் நமக்கும் அதே விளைவு தான் சம்பவிக்கும் . இருப்பினும், தேவன் இரட்சிக்கவும் ஆசீர்வதிக்கவும் ஏங்குகிறார், அதனால் நாம் நம் இருதயங்களை அவரிடம் திருப்பி, அவர் நமக்கு அளிக்க விரும்பும் கிருபையைப் பெற முடியும். ஆனால், அன்பான நண்பரே, இந்த மனந்திரும்புதல் என்பது தேவனுக்காக வாழ மீண்டும் நம்மை வழிநடத்தும் இதய மாற்றத்தைக் குறிக்கிறது!
என்னுடைய ஜெபம்
அன்பான தேவனே, எனது கடினமான போராட்டத்தின் சூழலில் அல்லது உயர்ந்த மகிழ்ச்சியின் காலங்களில் தயவுசெய்து உமக்கும் உமது விருப்பத்திற்கும் எப்பொழுதும் உண்மை உள்ளவனாக இருக்க எனக்கு உதவிச் செய்யும் . உண்மையான மனந்திரும்புதல், உறுதியான அன்பு, நீதியான குணம் மற்றும் கிருபை நிறைந்த இரக்கத்திற்கு ஒரு உதாரணமாக இருக்க எனக்கு உதவியருளும் . உமது மக்களிடையே மறுமலர்ச்சி, மனந்திரும்புதல் மற்றும் மறுசீரமைப்புக்காக நான் ஊக்கமாக இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.