இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கல்வித் தேடலில் பல உன்னதமான மற்றும் பயனுள்ள துறைகள் உள்ளன. இருப்பினும், இன்றைய வேதம் நமக்கு நினைப்பூட்டுவது போல், உண்மையான ஞானமும், மிகப்பெரிய புரிதலும் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே காண முடியும்: தேவனைப் பற்றிய பயபக்தியான அறிவு மற்றும் அவருடைய சித்தத்தை ஒப்புக்கொள்வது, நம்முடைய எல்லா வழிகளிலும் அவருக்கும் அவருடைய வார்த்தைக்கும் கீழ்ப்படிவதாகும் !

என்னுடைய ஜெபம்

கர்த்தராகிய தேவன், இஸ்ரவேலின் பரிசுத்த இரட்சகரும், என் அப்பா பிதாவும், கிருபையான ஜெபத்திற்காகவும் , ஞானத்திற்கு வழிவகுக்கும் உமது சத்தியத்தின் ஈவிற்காகவும் நன்றி. நீர் சத்தியபரராய் இருப்பதினால் உம்முடைய பரிசுத்த வேதாகமத்தில் உள்ள இந்த சத்தியத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்வதில் உறுதியாய் இருப்பதற்காக நன்றி , இவைகளை எங்கள் வாழ்வில் உம் பிரசன்னத்தைப் பற்றிய எங்கள் அனுபவத்தின் மூலமாகவும், பரிசுத்த ஆவியானவர் எங்கள் வாழ்வில் வழிநடத்துவதன் மூலமாகவும் இதை விளங்கச் செய்ததற்காக நன்றி. எங்களின் அனுதின வாழ்வில் உம் சத்தியத்தை இணைத்து ஞானத்துடன் வாழ முற்படும் போது எங்கள் மீது நீர் உம் பொறுமையை காண்பித்ததற்காக நன்றி. உம் கிருபைக்கும் நீதிக்கும் நன்றி. எங்களின் கீழ்ப்படிதலால் உம்மைக் கனப்படுத்தவும், உம் மகிமைகொண்டுவர நாங்கள் முயற்சிப்பதால், எங்கள் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் உம் கரங்களில் வைக்கிறோம். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறோம். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து