இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
உங்களுக்கு பிடித்த நபர் யார்? நான் ஞாயிறு வகுப்பில் சொல்லும் விடையை போல கேட்கவில்லை; நீங்கள் ஆழமாய் அந்த கேள்வியை சிந்தித்து பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் அதிகமாக எப்பொழுதும் எந்த நபரை குறித்து பிரம்மித்து பார்க்கிறீர்கள் ? அவர் இயேசுவானவரா ? " நம் கண்களை இயேசுவையே நோக்கி நிலைநிறுத்துவது" கடினம் என்பதை ஒப்புக்கொள்வோம், ஏனென்றால் நமது மற்ற பூமிக்குரிய பிடித்த நபர்களை போல நாம் அவரை உலக பிரகாரமான கண்களால் பார்க்கக்கூடிய இடத்தில் அவர் இல்லை. எவ்வாறாயினும், இயேசுவானவர் நமக்கு ஊற்றுக்காரணர் , பிரதான மாதிரியானவர் மற்றும் பாதுகாவலர் ஆவார் . அவர் சிலுவையின் கொடூரமான தண்டனையையும்,அவமானத்தையும் எதிர்கொண்டார், அதினால் நம்முடைய எல்லா பாவங்களையும் முற்றிலுமாய் நம்மை விட்டு அகற்றினார்! மரணம் அல்லது பாவம் அவரை அழிக்கவோ, காயப்படுத்தவோ அல்லது கறைப்படுத்தவோ முடியாத ஒரு மேலான மாதிரியை நாம் பெறுவதற்காக அவர் அதைச் செய்தார். அவருடைய அடிச்சுவடுகளை நாம் பின்பற்றினால், அவர் காட்டிய பாதை அவருக்கு மாத்திரமல்ல, அவரைப் பின்பற்றும் நம் அனைவருக்கும் உண்டாகும் என்று நம்பிக்கையுடன் நாம் யாவரும் இருக்க வேண்டும் என்பதற்காக இதைச் செய்தார்!
என்னுடைய ஜெபம்
பரிசுத்தமுள்ள தேவனே , என் சிறந்த மாதிரியாகிய இயேசுவிடம் இருந்து என் கவனத்தை விலக்கி, நான் மாயையை பற்றிக்கொண்டு அதை தொடர்ந்து போன வேளைகளுக்காக என்னை மன்னித்தருளும் . இயேசுவை நாங்கள் ஆண்டவராகக் கொண்டிருப்பதில் உள்ள நம்பிக்கையை மற்றவர்கள் அறியும் வகையில், அவருடைய ஜீவன் எனக்குள் உயிர்ப்பிக்கப்படுவதைக் கொண்டு நான் அவரை எப்பொழுதும் கணப்படுத்தவும் அவருக்கு ஊழியம் செய்யவும் விரும்புகிறேன். என் ஆண்டவராகிய இயேசுவின் தியாகத்திற்காகவும், என் பாவங்களுக்காக அவர் செலுத்திய மாபெரிதான விலைக்காகவும் என் நன்றியை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. அவர் மரணத்தை ஜெயித்து நான் என்றென்றும் உங்களுடன் விலகாமல் இருப்பேன் என்ற வாக்குத்தத்தத்தை எண்ணி பெறும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது! இயேசு கிறிஸ்து என்ற அவருடைய வல்லமையுள்ள நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.