இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பிரம்மிப்பூட்டும் அழகும், பிரகாசமுள்ள பன்முகத்தன்மையும் கொண்ட இப்பிரபஞ்சத்தில், அதை சிருஷ்டித்து இதுவரையிலும் அதை நிலைநிறுத்துகிறவரிடமே நம் இருதயங்கள் மறுபடியுமாய் ஒப்புவிக்க வேண்டும். அவர் நம்மை அறிந்திருக்கிறார், ஆனால் அவர் அநேக வழிகளில் சொல்ல முயற்சித்ததை நாம் விசுவாசித்தால் அப்பொழுது நமக்கு ஒத்தாசை அனுப்புவார் : "நான் உன்னை என் பிள்ளையாக அன்புக் கூருகிறேன், உனக்கும் நீ அன்புக்கூருகிறவர்களுக்கும் என்ன சம்பவிக்கிறது என்பதில் நான் அதிக அக்கறை கொண்டுள்ளேன்."

Thoughts on Today's Verse...

In a world of startling beauty and a universe of dazzling diversity, our hearts are to be drawn back to the One who made it and now sustains it. He knows us and will help us if we will but believe what he has tried so many ways to say: "I love you as my child and I deeply care what happens to you and those you love."

என்னுடைய ஜெபம்

சர்வ வல்லமையுள்ள சிருஷ்டிகரே, மகத்துவமுள்ளவரே மற்றும் நித்திய பொறியாளரே, நீர் என் மீது அக்கறை கொள்கிறீர் என்பதை அறிவது எனக்கு முற்றிலும் பிரம்மிப்பையும் மகிழ்ச்சியையும் கொடுக்கிறது . இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து காரியங்களுடனும், என்னை அறியவும் நேசிக்கவும் நீர் விரும்புவதை நான் தாழ்மையாகவும் உறுதியுடனும் காண்கிறேன். இன்று நான் உம் பிரசன்னத்தையும், கவனிப்பையும் உணர்ந்து உம்மை தொழுது , உமக்கு ஊழியஞ் செய்து , சாட்சியாக இருப்பேன் என்று வாக்களிக்கிறேன் . அன்புள்ள பிதாவே, இயேசுவின் நாமத்தினாலே நன்றி செலுத்துகிறேன் . ஆமென்

My Prayer...

Almighty Creator, Majestic Architect and Eternal Engineer, it absolutely bewilders and delights me to know that you care for me. With all the things of such vast importance, I find your desire to know and love me humbling and assuring. Today I will worship, work, and witness, aware of your presence and care. Thank you, dear Father, in Jesus' name. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of  சங்கீதம் 121:1-2

கருத்து