இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசு ஏன் பாவிகளுடன் சம்பாஷித்தார் ? ஏனென்றால் அவர் நமக்கு வேண்டும் அவரோடு சம்பாஷிக்க ! இந்த சத்தியத்தின் மிக முக்கியமான பகுதி என்ன: நம்மை நேசிக்கவும் இரட்சிக்கவும் இயேசுவின் விருப்பமா அல்லது பாவத்தில் இருப்பாதினால் அவர் நமக்கு தேவை என்பதை நாம் அங்கீகரிப்பதா ? நிச்சயமாக, நம்மை நேசிக்கவும் இரட்சிக்கவும் இயேசுவின் விருப்பமே என்பது மிகவும் ஆழமான சத்தியம். அவர் இல்லாமல், நம் பாவத்தை அங்கீகரிப்பது நம்மை விரக்தியடையச் செய்யும். அதே சமயம், இயேசுவின் அன்பு மற்றும் கிருபைக்கான நமது தேவையை நாம் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், நமக்காக ஆண்டவரின் தியாகம் நமக்கு இல்லாமல் போய்விடும். ஆகவே, அவருடைய இரக்கமுள்ள அன்பு மற்றும் வல்லமையுள்ள கிருபையின் தேவையை நாம் ஒப்புக்கொள்ளும்போது, ​​இயேசுவை நம்முடைய அன்பான மற்றும் தியாகமுள்ள இரட்சகராகப் ஏற்றுக்கொண்டு துதிப்போம் !

என்னுடைய ஜெபம்

கிருபையுள்ள பிதாவே , இயேசுவை என் இரட்சகராக கொடுத்ததற்காக என் இருதயத்தின் ஆழத்திலிருந்து இருந்து உம்மை போற்றி புகழ்கிறேன். அதே நேரத்தில், அன்பான பிதாவே , நான் அனுதினமும் பாவத்துடன் போராடுவதை ஒப்புக்கொள்கிறேன். என் வாழ்க்கையிலிருந்து பாவம் முழுவதுமாக வெளியேற வேண்டும் என்று நான் விரும்புகிறேன், ஆனாலும் அதன் நிலையான நிழலில் இருந்தும், ஊடுருவிச் செல்லும் கறையிலிருந்தும் என்னை விடுவித்துக் கொள்ள முடியாது என்பதை நான் காண்கிறேன். உமது கிருபையும் இயேசுவின் அன்பும் இரக்கமும் இல்லாவிட்டால், உம்முடைய பரிசுத்த பிள்ளையாக உம் சமூகத்திலே நிற்க முடியாது என்பதை நான் முழுநிச்சயமாய் அறிவேன். எனவே, நான் இப்போது உம்மிடம் அறிக்கையிட்ட பாவங்களுக்காக அடியேனை மன்னித்தருளும் . உம்முடைய அன்பையும், கிருபையையும் , இரக்கத்தையும் , மன்னிப்பையும் நான் பெற்றதைப் போல, உம்முடைய கிருபை நிறைந்த மன்னிப்பிற்காக உமக்கு நன்றிகளையும் ஸ்தோத்திரங்களையும் செலுத்துகிறேன் . இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து